தமிழக காங்கிரஸ் கட்சியின் சமூக ஊடகப் பிரிவின் தலைவராக விஜய் வசந்த் எம்.பி. நியமிக்கப்பட்டுள்ளார்.
இது தொடர்பாக அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழக காங்கிரஸ் கட்சியின் சமூக ஊடகப் பிரிவுக்கான மாநிலத் தலைவர் மற்றும் ஒருங்கிணைப்பாளர்களை நியமிக்கும் முன்மொழிவுக்குக் காங்கிரஸ் தலைவர் ஒப்புதல் அளித்துள்ளார்.
இந்த நியமனங்கள் உடனடியாக அமலுக்கு வருகின்றன. அதன்படி பிரிவின் மாநிலத் தலைவராக விஜய் வசந்த், ஒருங்கிணைப் பாளர்களாக சக்தி மாரிதாசன், ஜி.கே.முரளிதரன், சிவசத்யராஜா குணசேகரன், சஞ்சய் காந்தி, ஜான் சாமுவேல், அப்துல் ரஹ்மான் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்” எனக் கூறப்பட்டுள்ளது.















