இந்து சமய அறநிலைய துறை தனித் துறையாக உதயம்

0
15

தமிழகத்​தில் கோயில் நிர்​வாகத்தை மேம்​படுத்​தும் வகை​யில், இந்து சமய அறநிலை​யத் துறையை தனித் துறை​யாக உரு​வாக்கி தமிழக அரசு அரசாணை வெளி​யிட்​டுள்​ளது.

கடந்த திமுக ஆட்​சி​யில் இத்​துறை, ‘சுற்​றுலா, பண்​பாடு மற்​றும் அறநிலை​யங்​கள் துறை’ என்ற கூட்​டுத் துறை​யின்​கீழ் ஒரு பிரி​வாக செயல்​பட்டு வந்​தது. புதிய ஆட்சி அமைந்​ததும், வணி​கவரி மற்​றும் பதிவுத்​துறை​யின் கீழ் அறநிலை​யத்​துறை இணைக்​கப்​பட்​டது.

இந்​நிலை​யில், தற்​போது நிர்​வாக வசதிக்​காக​வும், பணி​களை துரிதப்​படுத்​த​வும், இது தனித் துறை​யாக மாற்​றப்​பட்​டுள்​ளது. இதற்​கான அரசாணையை தமிழக தலை​மைச் செயலர் எம். சாய் குமார் வெளி​யிட்​டுள்​ளார்.

தமிழ் வளர்ச்சி மற்​றும் செய்​தித் துறைச் செயல​ராக உள்ள வி. ராஜா​ராமனிடம் கூடு​தல் பொறுப்​பாக அறநிலை​யத்​துறை வழங்​கப்​பட்​டுள்​ளது.

இந்த புதிய துறை உரு​வாக்​கத்​துக்கு ஏற்ப, ‘தமிழ்​நாடு அரசு வணிக விதி​கள் 1978’-ல் உரிய மாற்​றங்​கள் விரை​வில் செய்​யப்பட உள்​ளன. இதற்​கான நடவடிக்​கைகளை மனிதவள மேலாண்​மைத் துறை மேற்​கொள்​ளும் என அரசாணை​யில்​ தெரிவிக்​கப்​பட்​டுள்​ளது.

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here