திருச்சி கிழக்கு தொகுதியில் விஜய் வாக்கு சேகரிப்பு

0
107

திருச்சி கிழக்கு சட்டப்பேரவைத் தொகுதியில் தவெக தலைவர் விஜய் வேட்பாளராக போட்டியிடுகிறார். திருச்சி கிழக்கு தொகுதிக்குட்பட்ட விமானநிலையம் வயர்லெஸ் சாலை, கே.கே.நகர், காஜாமலை, கொட்டப்பட்டு பகுதிகளில் ரோடு ஷோவில் பங்கேற்று நேற்று வாக்குசேகரித்தார்.

விமான நிலையத்திலிருந்து தனது பிரத்யேக பிரச்சார வேனில் ஏறி வெளியே வந்த விஜய், வேன் மீது நின்றபடி விசில்அடித்து, கையசைத்து வாக்கு சேகரித்தார். வயர்லெஸ் சாலையில் சாலை வலம் சென்றபோது, அங்குள்ள புனித அந்தோணியார் ஆலயத்துக்குச் சென்று தரையில் மண்டியிட்டு சிறிது தொலைவு சென்று ஜெபம் செய்தார்.

பின்னர், வேனில் ஏறி சாலை வலம் சென்ற விஜய், வேனில் முன்னாள் அமைச்சரும் லால்குடி தொகுதி தவெக வேட்பாளருமான கு.ப.கிருஷ்ணனை ஏற்றிக் கொண்டு வாக்கு சேகரித்தார். கே.கே.நகர் பகுதியில் உள்ள நூருல் ஹுதா பள்ளிவாசலுக்குச் சென்று அதன் தலைவர் மோத்தி ஹாஜியாரை சந்தித்து, திருச்சி கிழக்கு தொகுதியில் போட்டியிடும் தனக்கு ஆதரவு அளிக்குமாறு கேட்டுக்கொண்டார்.

திருச்சி- புதுக்கோட்டை தேசியநெடுஞ்சாலையில் கொட்டப்பட்டு அருகே உள்ள பச்சநாச்சியம்மன் கோயிலில் தரையில் சாஷ்டாங்கமாக விழுந்து கும்பிட்டார். அவருக்கு கோயில் நிர்வாகம் சார்பில் விபூதி, குங்குமம் உள்ளிட்டவை வழங்கப்பட்டன.திருச்சி கிழக்கு தொகுதியில் ஒன்றரை மணிநேரம் சாலை வலம் வந்த விஜய் எங்கும் பேசவில்லை.

எடப்​பாடி தொகு​தி​யில் சுயேட்​சைக்கு ஆதரவு: சேலம் மாவட்​டம், எடப்​பாடி சட்​டப்​பேரவை தொகு​திக்கு தவெக வேட்​பாள​ராக அருண்​கு​மார் என்​பவர் அறிவிக்​கப்​பட்​டார். ஆனால் அருண்​கு​மார் தாக்​கல் செய்த வேட்பு மனு​வில் முன்​மொழிந்​தவர்​களை உறுதி செய்ய முடி​யாத காரணத்​தால் அவரது வேட்பு மனு நிராகரிக்​கப்​பட்​டது. இதனால் எடப்​பாடி தொகு​தி​யில் மட்​டும் தவெக போட்​டி​யி​டாத சூழ்​நிலை உரு​வானது.

இந்​நிலை​யில், எடப்​பாடி சட்​டமன்​றத் தொகு​தி​யில் சுயேச்சை வேட்​பாள​ராகப் போட்​டி​யிடும் பிரேம்​கு​மார் என்பவருக்கு விஜய் ஆதரவு தெரிவித்துள்ளார். அவர் நேற்று வெளியிட்ட அறிக்கையில், ‘பிரேம்குமார் முன்பே நமது ரசிகர் மன்​றத்​தில் நிர்​வாகி​யாகப் பயணித்​தவர்​தான்.

எடப்பாடி தொகுதியில் வேட்​பாள​ராகப் போட்​டி​யிடும் நமது முன்​னாள் நிர்​வாகி​யான கூ.பிரேம்​கு​மாரை​யும், அவருக்கு ஒதுக்​கப்​பட்​டுள்ள தொலைக்​காட்​சிப் பெட்டி சின்​னத்​தை​யும் நமது தவெக சார்​பாக ஒரு​மன​தாக ஆதரிக்க முடிவு செய்​துள்​ளோம்​.பிரேம்​கு​மாருக்கு தொலைக்​காட்​சிப் பெட்டி சின்​னத்​தில் வாக்​களிக்க வேண்​டு​கிறேன்​’ என தெரிவித்​துள்​ளார்.

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here