எழுத்தாளர் சல்மான் ருஷ்டியை கத்தியால் குத்தியவர் குற்றவாளி என தீர்ப்பு

0
17

இந்​திய – பிரிட்​டானிய எழுத்​தாளர் சல்மான் ருஷ்டி. இவர் சாத்​தானின் வேதங்​கள் என்ற நாவலை கடந்த 1988-ம் ஆண்டு வெளி​யிட்​டார். இது இஸ்​லாமியர்​களின் மத உணர்​வு​களைப் புண்​படுத்​து​வ​தாக புகார் எழுந்தது.

இதனால் சல்​மான் ருஷ்டி உயிருக்கு அச்​சுறுத்​தல் ஏற்​பட்​டது. இந்​நிலை​யில் அமெரிக்​கா​வில் நடை​பெற்ற பொது நிகழ்ச்சி ஒன்​றில் சல்​மான் ருஷ்டி தாக்​கப்​பட்​டார். அவரை ஹாதி மாதர் (28) என்​பவர் கத்​தி​யால் 15 முறை குத்​தி​னார். இதில் சல்​மான் ருஷ்டி தனது வலது கண் பார்​வையை இழந்​தார்.

இந்த வழக்​கில் அமெரிக்க நீதி​மன்​றம் நேற்று முன்​தினம் தீர்ப்பளித்தது. சல்​மான் ருஷ்டியை தாக்​கிய ஹாதி மாதர் குற்றவாளி என தீர்ப்​பளிக்​கப்​பட்​டது. நியூயார்க் சிறை​யில் இருக்கும் அவருக்கு ஆயுள் தண்​டனை விதிக்​கப்​படலாம்​ என கூறப்​படுகிறது.

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here