ஃபிபா உலகக் கோப்பை கால்பந்து தொடருக்கு உஸ்பெகிஸ்தான், ஜோர்டான் முதன் முறையாக தகுதி

0
205

நார்வே கிளாசிக்கல் செஸ் போட்டி அந்நாட்டில் உள்ள ஸ்டாவஞ்சர் நகரில் நடைபெற்று வருகிறது. 6 வீரர்கள் கலந்து கொண்டுள்ள இந்தத் தொடர் இரட்டை ரவுண்ட் ராபின் முறையில் நடத்தப்பட்டு வருகிறது. இதில் 9-வது சுற்றில் உலக சாம்பியனான இந்தியாவின் குகேஷ், சீனாவின் வெய் யி-யுடன் மோதினார்.

இதில் குகேஷ் வெள்ளை காய்களுடன் விளையாடிய குகேஷ் 40-வது நகர்த்தலின் போது வெற்றி பெற்று முழுமையாக 3 புள்ளிகளை பெற்றார். நடப்பு சாம்பியனான மேக்னஸ் கார்ல்சன், அமெரிக்காவின் பேபியானோ கருனாவுடன் மோதினார். இதில் கார்ல்சன் 52-வது நகர்த்தலின் போது வெற்றி பெற்றார்.

இன்னும் ஒரு சுற்று மட்டுமே உள்ள நிலையில் 5 முறை உலக சாம்பியன் பட்டம் வென்ற நார்வேயின் மேக்னஸ் கார்ல்சன் 15 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளார். குகேஷ் 14.5 புள்ளிகளுடன் 2-வது இடத்தில் உள்ளார். அமெரிக்காவின் ஹிகாரு நகமுரா 13 புள்ளிகளுடன் 3-வது இடத்திலும், பேபியானோ கருனா 12.5 புள்ளிகளுடன் 4-வது இடத்திலும், இந்தியாவின் அர்ஜூன் எரிகைசி 11.5 புள்ளிகளுடன் 5-வது இடத்திலும், சீனாவின் வெய் யி 8 புள்ளிகளுடன் கடைசி இடத்திலும் உள்ளனர்.

தனது கடைசி சுற்றில் குகேஷ், அமெரிக்க கிராண்ட் மாஸ்டரான பேபியானோ கருனாவுடன் மோதுகிறார். மேக்னஸ் கார்ல்சன், இந்திய கிராண்ட் மாஸ்டரான அர்ஜூன் எரிகைசியை சந்திக்கிறார். இந்த தொடரில் சாம்பியன் பட்டம் வெல்பவருக்கு இந்திய மதிப்பில் சுமார் ரூ.59.11 லட்சம் பரிசுத் தொகை கிடைக்கும்.

நடப்பு சாம்பியனான கார்ல்சன் வெற்றி பெற்றால் அது அவரது 7 நார்வே செஸ் பட்டமாக அமையும். அதேவேளையில் குகேஷ் வென்றால் அது நார்வே செஸ் தொடரில் அவரது முதல் பட்டமாகவும், இந்தத் தொடரில் பட்டம் வெல்லும் முதல் இந்தியர் என்ற சாதனையையும் நிகழ்த்துவார்.

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here