வெளிநாட்டு மாணவர்களுக்கு மீண்டும் விசா வழங்கும் நடைமுறையை தொடங்கியது அமெரிக்கா

0
60

அமெரிக்க வெளியுறவுத்துறை வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: மாணவர்களுக்கு விசா வழங்கும் செயல்முறை கடந்த மே மாதம் நிறுத்தி வைக்கப்பட்டது. இந்த அறிவிப்பு ரத்து செய்யப்பட்டுள்ளது.

இதையடுத்து, மாணவர்கள் விசா பெறுவதற்கான நேர்காணல் விரைவில் தொடங்கும். ஆனால், விண்ணப்பதாரர்கள் தங்களது சமூக ஊடக கணக்குகளை பொது என்ற வகைமையில் அமைத்து மதிப்பாய்வு செய்ய அனுமதிக்கப்பட வேண்டும். அதற்கு உடன்பட மறுக்கும் மாணவர்களின் விசா விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படலாம்.

அமெரிக்கா மற்றும் அதன் அரசாங்கம், கலாச்சாரம், நிறுவனங்கள் அல்லது நிறுவனக் கொள்கைகளை விரோதமாக கருதக்கூடிய மாணவர்களின் பதிவுகள் மற்றும் செய்திகளை தூதரக அதிகாரிகள் தொடர்ந்து கண்காணிப்பாளர்கள். இவ்வாறு வெளியுறவு துறை தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here