ஈரானில் இதுவரை 10,000 இலக்குகள் மீது அமெரிக்கா தாக்குதல்

0
100

ஈ​ரானுக்கு எதி​ரான போரில் 10 ஆயிரம் இலக்கு​கள் மீது தாக்​குதல் நடத்​தி​யுள்​ளோம் என்று அமெரிக்கா அறி​வித்​துள்​ளது.

ஈரானுக்​கும், அமெரிக்கா, இஸ்​ரேல் படைகளுக்​கு​மான போர் கடந்த பிப்​ர​வரி 28-ம் தேதி முதல் நடந்து வரு​கிறது. இதுகுறித்து அமெரிக்கா​வின் ராணுவ மத்​திய கமாண்டை சேர்ந்த கடற்​படை அட்​மிரல் பிராட் கூப்​பர் நேற்று கூறியதாவது: ஈரான் போரின்போது 10 ஆயிரத்​துக்​கும் மேற்​பட்ட இலக்​கு​களைத் தாக்கி அழித்துள்ளோம். இதில் பல்​வேறு வெடிபொருட்​கள் ஆலைகளும் அடங்​கும். இதுதொடர்​பான வீடியோக்​களை​யும் நாங்​கள் வெளியிட்டுள்​ளோம்.

நாங்​கள் சாதித்​தவற்​றை​யும், அமெரிக்கா – இஸ்​ரேல் படைகள் இணைந்து ஈட்​டிய வெற்​றியை​யும் இணைத்​துப் பார்க்​கும் போது இது நன்​றாகத் தெரி​யும். எங்​களின் துல்​லி​யத் தாக்​குதல்​கள் ஈரானிய வான் பாது​காப்பு அமைப்​பு​களை நிலைகுலை​யச் செய்​துள்​ளன. மேலும் எங்​கள் போர் விமானங்​கள் குறிப்​பிடத்​தக்க அளவி​லான தாக்​கங்​களை ஏற்​படுத்தி வரு​கின்​றன.

ஈரானியக் கடற்​படை​யின் மிகப்​பெரிய கப்​பல்​களில் 92 சதவீதத்தை அமெரிக்கா அழித்​து​விட்​டது. இப்​பகு​தி​யிலும், உலகம் முழு​வ​தி​லும் தங்​கள் கடற்​படை வலிமை​யை​யும் ஆதிக்​கத்​தை​யும் ஈரான் இழந்​து​விட்​டது. அந்த அளவுக்கு அழிவை அப்​பகு​தி​யில் ஏற்​படுத்​தி​யுள்​ளோம். ஈரானுக்​குச் சொந்​த​மான மூன்​றில் 2 பங்கு வெடிபொருட்​கள் ஆலைகள் மீது தாக்​குதல் நடத்​தப்​பட்​டுள்​ளது.

இது​வரை ஈரானின் ஏவுகணை, ஆளில்லா விமானம் மற்றும் கடற்படை உற்பத்தி நிலையங்கள், கப்பல் கட்டும் தளங்கள் ஆகியவற்றில் மூன்றில் இரண்டு பங்குக்கும் அதிகமானவற்றை நாங்கள் சேதப்படுத்தியுள்ளோம். ஆனாலும், எங்கள் பணி இன்னும் முடிவடையவில்லை. ஈரானின் பரந்து விரிந்த ராணுவ உற்பத்தி கட்டமைப்பை முழுமையாக அழிக்கும் பாதையை நோக்கி பயணித்து வருகிறோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here