Home தேசிய செய்திகள் பெங்களூரு உணவகத்தில் தோசை சுட்ட மத்​திய அமைச்சர் ஜோதிர் ஆதித்ய சிந்தியா

பெங்களூரு உணவகத்தில் தோசை சுட்ட மத்​திய அமைச்சர் ஜோதிர் ஆதித்ய சிந்தியா

0

மத்​திய தகவல் தொடர்​புத்​துறை அமைச்​சர் ஜோதிர் ஆதித்ய சிந்தியா பெங்களூரு​வில் உள்ள ராமேஸ்வரம் கஃபே உணவகத்​துக்கு சென்று தோசை சுட்ட வீடியோ இணை​யத்​தில் வைரலாகி​யுள்​ளது.

பெங்​களூரு நகருக்கு நேற்று வந்த மத்​திய தகவல் தொடர்​புத்​துறை அமைச்​சர் ஜோதிர் ஆதித்ய சிந்​தியா ராமேஸ்​வரம் கஃபே உணவகத்​துக்கு சென்​றார். அங்​குள்ள சமையலறைக்கு சென்ற அவர் வாடிக்​கை​யாளர்​கள், சமையல்​காரர்​களின் முன்னிலையில் மாவை ஊற்​றி, சுடச்​சுட தோசை சுட்​டார்.

பின்​னர் அவரே அந்த தோசையை வாடிக்​கை​யாளர்​களுக்கு பரி​மாறி​னார். பின்​னர் ஃபில்​டர் காஃபி போட்டு நுரை பொங்க வாடிக்​கை​யாளர்​களுக்கு வழங்​கி​னார்.

இது தொடர்​பான வீடியோவை தனது இன்​ஸ்​டாகி​ராம் பக்​கத்​தில் பகிர்ந்தமத்​திய அமைச்​சர் ஜோதிர் ஆதித்ய சிந்​தி​யா, “பெங்களூரு வந்​தால் ராமேஸ்​வரம் கஃபே வராமல் இருக்க மாட்டேன். இன்று அங்கு சென்று தோசை சுட்​டேன். வெளி​யில் இருந்து பார்ப்​ப​தற்கு தோசை சுடு​வது எளி​தாகத் தோன்​றலாம். ஆனால் அதன் பின்​னணி​யில் கடின உழைப்பு உள்​ளது” என குறிப்பிட்​டுள்​ளார். மத்​திய அமைச்​சரின் இந்த ‘செஃப்’ அவதார வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version