Home தேசிய செய்திகள் தேசிய உயிரி எரி​வாயு திட்டத்துக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்

தேசிய உயிரி எரி​வாயு திட்டத்துக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்

0

பிரதமர் நரேந்​திர மோடி தலை​மை​யில் டெல்​லி​யில் நேற்று மத்திய அமைச்சரவைக் கூட்​டம் நடை​பெற்​றது. இந்த கூட்டத்​தில் ரூ.23,731 கோடி மதிப்​பிலான தேசிய ஒருங்​கிணைந்த உயிரி எரி​வாயு திட்​டத்​துக்கு ஒப்​புதல் அளிக்​கப்​பட்​டது. புதிய திட்டத்​துக்கு கோபர்​தன் என்று பெயர் சூட்​டப்​பட்டு உள்​ளது.

இதன்​படி கிராமங்​கள்​தோறும் வேளாண் கழி​வு​கள், மாட்​டு சாணம், சர்க்​கரை ஆலை கழி​வு​கள், காய்​கனி கழி​வு​கள் ஆகிய​வற்​றின் மூலம் உயிரி எரி​வாயு உற்​பத்தி செய்​யப்​படும்.

நடப்பு 2026-27 நிதி​யாண்டு முதல் 2035-36 வரை கோபர்​தன் திட்டம் செயல்​படுத்​தப்​படும். கிராமங்​களில் உற்​பத்தி செய்யப்படும் எரி​வா​யுவை, முன்​னணி நிறு​வனங்​கள் கொள்முதல் செய்து நாடு முழு​வதும் விநி​யோகம் செய்​யும்.

கோபர்​தன் திட்​டத்​தின் மூலம் நாடு முழு​வதும் 200 உயிரி எரி​வாயு ஆலைகள் அமைக்​கப்​படும். இந்த ஆலைகளில் உற்​பத்தி செய்யப்படும் உயிரி எரி​வா​யு, இயற்கை எரி​வா​யுக்கு இணையான​தாக இருக்​கும். இதன்​மூலம் வெளி​நாடு​களில் இருந்து இயற்கை எரி​வாயு இறக்​குமதி செய்​வது கணிச​மாகக் குறை​யும்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version