Home தேசிய செய்திகள் பாகிஸ்தான் உளவாளியாக மாறிய லாரி ஓட்டுநர் கைது – சிசிடிவி மூலம் ராணுவ நடமாட்டத்தை பகிர்ந்தார்

பாகிஸ்தான் உளவாளியாக மாறிய லாரி ஓட்டுநர் கைது – சிசிடிவி மூலம் ராணுவ நடமாட்டத்தை பகிர்ந்தார்

0

ஹனிடி​ராப் வலை​யில் சிக்கி பாகிஸ்தான் உளவாளியாக மாறிய காஷ்மீர் லாரி ஓட்​டுநரை போலீ​ஸார் கைது செய்து விசாரணை நடத்தி வரு​கின்​றனர்.

இந்​திய ராணுவத்​தின் நடமாட்​டங்​களை வேவு பார்த்த குற்றச்சாட்டின் கீழ், ஜம்மு காஷ்மீரின் கதுவா மாவட்​டத்​தைச் சேர்ந்த அமன் (24) என்ற லாரி ஓட்​டுநரை போலீ​ஸார் கைது செய்துள்​ளனர்.

இதுகுறித்து போலீஸ் அதி​காரி​கள் கூறுகையில், ‘‘சமூக வலைத்தளம் மூல​மாக பாகிஸ்​தான் பெண் உளவாளி ஒரு​வரின் தொடர்பு அமனுக்கு கிடைத்​துள்​ளது. அவரை ‘ஹனி-டி​ராப்’ வலையில் சிக்க வைத்த பாகிஸ்​தான் பெண், இந்​தி​யா​வின் பாதுகாப்​பு விவரங்​களை பாகிஸ்​தான் உளவாளி​களு​டன் பகிர்ந்து கொள்ள அவரை வற்​புறுத்​தி​யுள்​ளார்.

அதன்​படி, கதுவா பகு​தி​யில் உள்ள தனது வீட்​டின் வெளியே சிம் கார்டு பொருத்​திய அதிநவீன சிசிடிவி கேமரா ஒன்றை அமன் நிறுவி​யுள்​ளார். இதன்மூலம், இந்​திய ராணுவ வாக​னங்​களின் நடமாட்​டங்​கள், ராணுவப் பிரிவு​களின் இடமாற்​றம் மற்​றும் ஆயுத தளவாடங்​களின் போக்​கு​வரத்து ஆகிய​வற்றை பாகிஸ்​தான் உளவாளி​கள் தங்​களின் இருப்​பிடத்​தில் இருந்​த​படியே நேரலையாக கண்​காணித்து வந்​துள்​ளனர்.

இதையறிந்து், பாது​காப்​புப் படை​யினர் மேற்​கொண்ட அதிரடி நடவடிக்​கை​யி்ல் அமனின் வீட்​டில் இருந்த அதிநவீன கேம​ரா மற்றும் டிஜிட்​டல் சாதனங்​கள் பறி​முதல் செய்​யப்​பட்​டன. அமன் மீது இந்​தி​யா​வின் அதி​காரப்​பூர்வ ரகசி​யங்​கள் சட்​டத்​தின் கீழ் வழக்​குப் பதிவு செய்​யப்​பட்​டுள்​ளது,’’ என்று தெரிவித்தனர்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version