Home தேசிய செய்திகள் வங்கக் கடலில் உருவானது ‘முரசு’ புயல் – ஒடிசாவின் தெற்கு பகுதிகளுக்கு தீவிர எச்சரிக்கை

வங்கக் கடலில் உருவானது ‘முரசு’ புயல் – ஒடிசாவின் தெற்கு பகுதிகளுக்கு தீவிர எச்சரிக்கை

0

வங்கக் கடலில் நிலைகொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம், ‘முரசு’ புயலாக வலுவடைந்துள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘இந்தியா பெயரிட்டுள்ள ‘முரசு’ புயல், வங்கக் கடலில் உருவாகி உள்ளது. இது தீவிரமடைந்து மிகத் தீவிர புயலாக மாறக்கூடும். நவ. 3ம் தேதி காலை நெல்லூர் மற்றும் நரசபூருக்கு இடைப்பட்ட கடற்கரையை வந்தடையும். புயல் கரையை கடக்கும்போது, மணிக்கு 100 முதல் 110 கி.மீ. வேகத்தில் காற்று வீசக்கூடும். அவ்வப்போது 120 கி.மீ. வேகத்திலும் காற்று வீசக்கூடும்.’ என தெரிவித்துள்ளது.

‘முரசு’ புயல் தெற்கு ஒடிசாவை தாக்கும் என்பதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அம்மாநில அரசு மேற்கொண்டுள்ளது. இது தொடர்பாக தெரிவித்த மாநில பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் சுரேஷ் பூஜாரி, “புயல் காரணமாக ஒடிசாவின் தெற்குப் பகுதிகளுக்கு ஏற்கனவே தீவிர எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தாழ்வான பகுதிகளிலும் மலைப்பாங்கான பகுதிகளிலும் வசிக்கும் மக்களை வெளியேற்ற அரசு உத்தரவிட்டுள்ளது.” என தெரிவித்தார்.

புவனேஸ்வர் வானிலை ஆய்வு மைய இயக்குநர் மனோரமா மொஹந்தி கூறுகையில், “‘முரசு’ புயலின் தாக்கத்தால் ஒடிசாவில் நவ. 2ம் தேதி முதல் மழை பெய்யத் தொடங்கும். நவ. 3 மற்றும் 4 ஆகிய தேதிகளில் மழையின் தீவிரம் அதிகரிக்கும்.” என தெரிவித்துள்ளார்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version