Home தேசிய செய்திகள் “ஞானேஷ் குமாருக்கு சிறை உறுதி” – இண்டியா கூட்டணி பொது கூட்டத்தில் ராகுல் திட்டவட்டம்

“ஞானேஷ் குமாருக்கு சிறை உறுதி” – இண்டியா கூட்டணி பொது கூட்டத்தில் ராகுல் திட்டவட்டம்

0

“நாடு முழுவதும் வாக்குகள் திருடப்படுவதற்கு தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் உடந்தையாக இருந்தார். அவர் தனது பதவியிலிருந்து நீக்கப்பட்டு, சிறைக்கு அனுப்பப்படுவார்” என்று இண்டியா கூட்டணி பொதுக்கூட்டத்தில் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்தார்.

தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாருக்கு எதிராக ‘சலோ டெல்லி’ பேரணியை இண்டியா கூட்டணி இன்று நடத்தியது. இதனையடுத்து ராம்லீலா மைதானத்தில் இன்று நடைபெற்ற பிரமாண்ட பொதுக்கூட்டத்தில் பேசிய ராகுல் காந்தி, “நான் சொல்வதைக் கவனியுங்கள். நான் சொல்வது எப்போதும் உண்மையாகவே நடக்கிறது, இல்லையா? இந்தியாவின் ஒவ்வொரு குடிமகனிடமும், ஒவ்வொரு இளைஞரிடமும் நான் சொல்கிறேன்.

தலைமைத் தேர்தல் ஆணையர் பதவியிலிருந்து ஞானேஷ் குமார் நீக்கப்படுவார். அவர் சிறைக்குச் செல்வார். ஞானேஷ் குமார் இல்லையென்றால், நரேந்திர மோடி பிரதமராகியிருக்க முடியாது, அமித் ஷா உள்துறை அமைச்சராகியிருக்க முடியாது” என்று அவர் தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய ராகுல் காந்தி, “விவசாயிகளுக்கு அவர்களின் உரிமைகள் கிடைக்கவில்லை. இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கவில்லை. தொழிலாளர்களுக்கு அவர்களின் உரிமைகள் கிடைக்கவில்லை; நாட்டின் ஒட்டுமொத்த செல்வமும் இரண்டு அல்லது மூன்று நபர்களின் கைகளுக்குச் சென்றுவிட்டது. இத்தகைய இந்தியாவை நாங்கள் விரும்பவில்லை, இத்தகைய இந்தியாவை நாங்கள் ஏற்றுக்கொள்ளவும் மாட்டோம்.

பல ஆண்டுகளாக இந்த நாட்டில் வாக்குகள் திருடப்பட்டு வருகின்றன. மத்தியப் பிரதேசம், ஹரியானா, சத்தீஸ்கர், மகாராஷ்டிரா, கர்நாடகா மற்றும் 2024 மக்களவைத் தேர்தல் என, இவை அனைத்திலும் வாக்குகள் திருடப்பட்டுள்ளன.

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மூலமாகவும், வாக்காளர் பட்டியலில் பெயர்களை நீக்கியும் சேர்த்தும் வாக்குகள் திருடப்பட்டுள்ளன. 2024 மக்களவைத் தேர்தலுக்குப் பிறகு இந்தியாவின் வாக்காளர் பட்டியலில் இருந்த 15 சதவீத வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளன” என குற்றம் சாட்டினார்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version