Home தேசிய செய்திகள் உ.பி.யின் வாராணசி விமான நிலையத்தில் துப்பாக்கி தற்செயலாக வெடித்து 2 வீரர்கள் காயம்

உ.பி.யின் வாராணசி விமான நிலையத்தில் துப்பாக்கி தற்செயலாக வெடித்து 2 வீரர்கள் காயம்

0

ஏர் இந்​தியா எக்​ஸ்​பிரஸ் விமானத்​தில் பயணம் செய்ய வந்த பயணி ஒரு​வரின் உரிமம் பெற்ற கைத்​துப்​பாக்கி தற்​செய​லாக வெடித்​த​தில் பாதுகாப்புப் படை வீரர்கள் இரு​வர் காயமடைந்​தனர்.

உத்தர பிரதேச மாநிலம் வாராணசி​யில் இருந்து மும்பை செல்​ல​விருந்த ஏர் இந்​தியா எக்​ஸ்​பிரஸ் விமானத்​தில் பயணிப்​ப​தற்​காக வந்த பயணி ஒரு​வரிடம் இருந்த கைத்​துப்​பாக்​கியை பரிசோ​தித்​த​போது எதிர்​பா​ராத​வித​மாக வெடித்​தது. இந்த விபத்​தில் அங்கு பணி​யில் இருந்த மத்​திய தொழில் பாது​காப்​புப் படை (சிஐஎஸ்​எப்) வீரர்​கள் இரு​வர் லேசான காயமடைந்​தனர்.

காயமடைந்த வீரர்​கள் உடனடி​யாக முதலுதவி சிகிச்​சைக்​காக அங்​குள்ள மருத்​து​வ​மனைக்​குக் கொண்டு செல்​லப்​பட்​டனர். துப்​பாக்​கியை வைத்​திருந்த பயணி​யிடம் உரிய உரிமம் உள்​ளதா என்​பது குறித்​தும், பாது​காப்பு விதி​மீறல்​கள் ஏதேனும் நடந்துள்ளதா என்​பது குறித்​தும் விமான நிலை​ய காவல் துறையினரும் சிஐஎஸ்​எப் அதி​காரி​களும் தீவிர விசா​ரணை மேற்​கொண்டு வரு​கின்​றனர். இச்​சம்​பவத்​தால் வாராணசி வி​மான நிலை​யத்​தில் நேற்று காலை சிறிது நேரம்​ பரபரப்​பு நில​வியது.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version