கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில், முகம்மது ரபீக் மைதீன் என்பவருக்கு சொந்தமான மோட்டார் சைக்கிள் திருடு போனது. இதுகுறித்து கோட்டார் போலீஸ் நிலையத்தில் அளிக்கப்பட்ட புகாரின் பேரில், போலீசார் நெல்லையைச் சேர்ந்த சபரி (22) மற்றும் நிவாஸ் நசீர் (20) ஆகிய இருவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.














