“பெண்களை 50 ஆண்டு பின்னோக்கி இழுத்துச் செல்கிறது தவெக அரசு” – கனிமொழி விமர்சனம்

0
25

தாய்​மாமன் சீர், அண்​ணனின் சீர்​வரிசை என தவெக அரசு பெண்​களை மீண்​டும் 50 ஆண்டுகள் பின்னோக்கி பழமை​வாதத்​துக்கு இழுத்​துச் செல்​லப் பார்க்​கிறது என திமுக துணைப் பொதுச் செய​லா​ளர் கனி​மொழி குற்​றம்​சாட்​டி​னார்.

இதுகுறித்து சென்​னை​யில் நடந்த கிழக்கு மாவட்ட திமுக மகளிர் அணி மற்​றும் மகளிர் தொண்​டர் அணி முப்​பெரும் விழா பொதுக்​கூட்​டத்​தில் அவர் பேசி​ய​தாவது: பெண்​கள் மற்​றும் குழந்தைகளின் பாது​காப்பை உறுதி செய்​யத் தவறிய ஆட்​சி​யாக தவெக ஆட்சி உள்​ளது.

பெண்​கள் யாரை​யும் எதிர்​பார்த்து நிற்காமல் சொத்​துரிமை, கல்வி, வரு​மானம் பெற்று சுய மரியாதை​யுடன் சொந்​தக் காலில் தலைநிமிர்ந்து வாழ வேண்​டும் என்​பதே திமுக​வின் கொள்​கை. ஆனால், தற்​போதைய அரசு தாய்மாமன் சீர், அண்​ணனின் சீர்​வரிசை என்ற பெயரில் பெண்களை மீண்​டும் 50 ஆண்​டு​கள் பின்​னோக்​கி, பழமைவாதத்திற்கு இழுத்​துச் செல்​லப் பார்க்​கிறது.

மருத்​து​வ​மனை​களில் போதிய மருத்​து​வர்​களும், குழந்தைகளுக்குத் தேவை​யான மருந்​துகளும் இல்​லாத நிலையில், நூற்​றுக்​கணக்​கான கோடி ரூபாயைச் செல​விட்டு ஒரு கிராம் தங்க மோதிரம் வழங்​கும் விளம்பர அரசி​யலை செய்கிறார்​கள். நாடு முழு​வதும் ஜிஎஸ்டி வரு​வாய் 14.7 சதவீதம் உயர்ந்​துள்ள நிலை​யில், தமிழகத்​தில் மட்​டும் 5 சதவீதம் குறைந்துள்​ளது. இது மாநிலத்​தின் நிதி நெருக்​கடியை​யும் பொருளா​தா​ரச் சரிவை​யுமே காட்​டு​கிறது. இவ்​வாறு அவர் பேசினார்.

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here