நண்பர்களுடன் கடலில் குளித்தபோது சோகம்: அலையில் சிக்கி மாணவன் உயிரிழப்பு

0
19

நண்​பர்​களு​டன் கடலில் குளித்​த​போது, அலையில் இழுத்​துச் செல்​லப்​பட்ட மாணவன் உயி​ரிழந்​தார். சென்​னை, புழு​தி​வாக்​கத்​தைச் சேர்ந்​தவர் இஷாந்த் குமார் (17).

இவர் 12-ம் வகுப்பு படிப்பை முடித்​து​விட்​டு, நுங்​கம்​பாக்​கத்​தில் உள்ள தனி​யார் கல்​லூரி ஒன்​றில் சேர​விருந்​தார். இந்​நிலை​யில், இஷாந்த் குமார் தனது நண்​பர்​கள் 4 பேருடன் நேற்றுமுன்தினம் காலை திரு​வான்​மியூர் கடற்​கரைக்கு சென்​றார்.

அங்கு அனை​வரும் ஒன்​றாக கடலில் குளித்​தனர். அப்​போது, அவர்​கள் ஒரு​வரையொரு​வர் தொட்​டுப் பிடித்து விளை​யாடிய​தாக கூறப்​படு​கிறது. அந்த சமயத்​தில், திடீரென எழுந்த ராட்சத அலை, இஷாந்த் குமாரை கடலுக்​குள் இழுத்​துச் சென்​றது. அவரை காப்​பாற்ற நண்​பர்​கள் முயன்​றும் முடிய​வில்​லை.

இதுகுறித்​து, நண்​பர்​கள் திரு​வான்​மியூர் போலீ​ஸாருக்கு தகவல் தெரி​வித்​தனர். அதன்​பேரில், போலீ​ஸார் சம்பவ இடத்​துக்கு விரைந்து சென்று விசா​ரணை நடத்​தினர். மேலும், தீயணைப்பு படை வீரர்​கள் மற்​றும் நீச்​சல் வீரர்​கள் உதவி​யுடன் மாணவரை தேடும் பணி​யில் ஈடு​பட்​டனர்.

இந்​நிலை​யில், சிறிது நேரத்​திற்​குப் பிறகு திரு​வான்​மியூர் மீனவர் குப்​பம் அருகே இஷாந்த் குமாரின் இறந்த உடல் கரை ஒதுங்​கியது.

இதையடுத்​து, போலீ​ஸார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்​காக அரசு மருத்​து​வ​மனைக்கு அனுப்பி வைத்​தனர். இந்த சம்​பவம் குறித்​து, திரு​வான்​மியூர் போலீ​ஸார் வழக்​குப் பதிவு செய்து வி​சா​ரணை நடத்தி வருகின்றனர்.

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here