‘தொட்டாங் சிணுங்கி’ இயக்குநர் கே.எஸ்.அதியமான் ரிட்டர்ன்!

0
472

‘தொட்டாங் சிணுங்கி’ இயக்குநர் கே.எஸ்.அதியமான் நீண்ட இடைவெளிக்குப் பிரகு மீண்டும் படம் ஒன்றை இயக்கி வருகிறார்.

‘தொட்டாங் சிணுங்கி’ படத்தின் மூலம் இயக்குநராக கொண்டாடப்பட்டவர் கே.எஸ்.அதியமான். அப்படத்துக்குப் பிறகு தமிழ், இந்தி படங்களை இயக்கினாலும் எதுவுமே பெரியளவுக்கு வரவேற்பு பெறவில்லை. இதனைத் தொடர்ந்து உதயநிதி ஸ்டாலினை வைத்து படம் ஒன்றை இயக்கினார். அப்படமும் பாதியிலேயே நிற்கிறது.

தற்போது புதிய படம் ஒன்றை சத்தமின்றி இயக்கி வருகிறார் அதியமான். சுரேஷ் காமாட்சி தயாரித்து வரும் இப்படத்தில் விதார்த், ரேவதி, லிஜோ மோல் ஜோஸ் உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள். இதன் தொழில்நுட்ப கலைஞர்கள் விவரங்கள் விரைவில் தெரியவரும். ஒட்டுமொத்த படத்தினையும் முடித்துவிட்டு, படம் குறித்த அறிவிப்பை வெளியிட படக்குழு திட்டமிட்டு இருக்கிறது.

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here