“வரலாற்றுச் சிறப்புமிக்க நட்பு இது” – பிரதமர் மோடிக்கு ஈரான் உச்ச தலைவர் மோஜ்தபா பதில்

0
13

இந்தியாவுக்கும் ஈரானுக்கும் இடையே இருப்பது பரஸ்பர மரியாதை மற்றும் பொதுவான நலன்களின் அடிப்படையில் அமைந்த வரலாற்றுச் சிறப்பு மிக்க நட்பு என்று ஈரான் உச்ச தலைவர் மோஜ்தபா கமேனி தெரிவித்துள்ளார்.

பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு வாழ்த்து தெரிவித்த பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்து வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு வாழ்த்து தெரிவித்த பிரதமர் நரேந்திர மோடிக்கு, ஈரான் உச்சத் தலைவர் மோஜ்தபா கமேனி நன்றி தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.

ஈரான் உச்சத் தலைவராக பொறுப்பேற்றுக்கொண்ட பிறகு மோஜ்தபா கமேனி, பிரதமர் நரேந்திர மோடிக்காக வெளியிட்டுள்ள முதல் அறிக்கை இதுவாகும். அவர் தனது அறிக்கையில், “பிரதமர் நரேந்திர மோடி அவர்களே, புனிதமான பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு மேன்மை மிக்க தங்களிடம் இருந்து வந்த வாழ்த்துச் செய்தியைப் பெற்றேன். எனது மனமார்ந்த நன்றியையும் பதிலுக்கு வாழ்த்துகளையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

பரஸ்பர மரியாதை மற்றும் பொதுவான நலன்களின் அடிப்படையில் அமைந்த நமது இரு நாடுகளுக்கு இடையிலான வரலாற்றுச் சிறப்புமிக்க நட்பு, நமது அரசுகளின் முயற்சிகளால் மேலும் வலுப்படுத்தப்பட்டு விரிவடையும் என்று நான் உறுதியாக நம்புகிறேன். இந்திய அரசு மற்றும் மக்களின் செழிப்புக்காகவும், தொடர் வெற்றிக்காகவும் நான் எல்லாம் வல்ல இறைவனிடம் பிரார்த்திக்கிறேன்” என தெரிவித்துள்ளார்.

ஈரானுக்கு எதிராக அமெரிக்காவும் இஸ்ரேலும் இணைந்து நடத்திய தாக்குதலில் உயிரிழந்த ஈரானின் முந்தைய உச்ச தலைவரான அயத்துல்லா அலி கமேனியின் இறுதிச்சடங்கில் பங்கேற்க பிரதமர் நரேந்திர மோடிக்கு, அந்நாட்டு அதிபர் மசூத் பெசெஷ்கியான் அழைப்பு விடுத்ததிருந்த நிலையில், இந்த அறிக்கை வெளியாகி உள்ளது.

அமெரிக்காவும் இஸ்ரேலும் இணைந்து கடந்த பிப்ரவரி 28-ம் தேதி ஈரான் மீது வான்வழித் தாக்குதலை தொடங்கின. இந்த தாக்குதலின் முதல் நாளிலேயே ஈரான் உச்ச தலைவராக இருந்த அயத்துல்லா அலி கமேனி (86) கொல்லப்பட்டார். கமேனியின் இறுதிச்சடங்குகள் தலைநகர் டெஹ்ரானில் ஜூலை 4-ம் தேதி தொடங்க உள்ளன. அவரது சொந்த ஊரான, வடகிழக்கு புனித நகரமான மஷாத்தில் ஜூலை 9-ம் தேதி உடல் நல்லடக்கம் செய்யப்படுவதுடன் இறுச்சடங்கு நிறைவடைகிறது.

இந்நிலையில், கமேனியின் இறுதிச் சடங்கில் பங்கேற்க இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு ஈரான் அதிபர் மசூத் பெசெஷ்கியான் அழைப்பு விடுத்ததிருந்தார். இந்த பல்வேறு நாடுகளின் தலைவர்கள் உட்பட சுமார் 2 கோடி பேர் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here