108 வைணவ தரங்களில் ஒன்றான திருவட்டார் ஆதி கேசவபெருமாள் கோவிலில் வருகிற 10-ம் தேதி வைகுண்ட ஏகாதசி விழா நடைபெற உள்ளது. அன்று அதிகாலை 3:30 மணிக்கு நிர்மால்ய தரிசனம் நடைபெறும். அன்றைய தினம் ஒரு நாள் மட்டும் மதியம் 1:15 நிமிடங்கள் மட்டுமே கோயில் நடை சம்பிரதாயத்திற்காக அடைக்கப்படும்.
அதை தொடர்ந்து இரவு 10 மணி வரை பக்தர்கள் இடைவெளி இன்றி சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள். மாலை ஐந்து மணிக்கு புஷ்பாபிஷேகம், தொடர்ந்து தீபாராதனை நடக்கிறது. தீபாராதனை தொடர்ந்து கோவில் விளக்க அணி மண்டபத்தில் உள்ள விளக்குகளுக்கு ஒளி ஏற்றும் இலட்சதீபங்கள் நிகழ்ச்சி நடைபெறுகிறது. அப்போது கோவில் ஒளி வெள்ளத்தில் ஜொலிக்கும். இரவு 9:30 மணி அளவில் கருட வாகனத்தில் ஆதிகேசவபெருமாள், கிருஷ்ணசாமியும் கோவில் பிரகாரத்தில் பவனி வருதல் நடைபெறுகிறது.
ஜனவரி 9-ம் தேதி இரவு 10 மணி அளவில் கோவில் கருவறையின் உட்பகுதி, மார்த்தாண்ட மண்டபம், சபா மண்டபம் ஆகிய இடங்கள் மலர்களால் அலங்கரிக்கப்படுகிறது. வைகுண்ட ஏகாதசி விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் பக்தர்களும் செய்து வருகின்றனர்.