திருவட்டார்: பள்ளி மாணவ மாணவிகளிடம் கலந்துரையாடிய கலெக்டர்

0
2908

தமிழக முதல்வரின் உங்களை தேடி உங்கள் ஊரில் திட்டத்தின்படி திருவட்டார் தாலுகாவுக்கு உட்பட்ட பகுதிகளில் இன்று (20-ம் தேதி) குமரி கலெக்டர் அழகு மீனா ஆய்வு மேற்கொண்டார். திருவட்டார் அரசு உயர்நிலைப் பள்ளியில் மாணவ மாணவிகளுடன் கலந்துரையாடி, மாணவ மாணவிகளுக்கு பல்வேறு அறிவுரைகளை வழங்கினார். சமூக வலைத்தளங்களில் தேவையானவற்றை மட்டும் பார்க்க வேண்டும். 

வெப்சைட்டில் படிப்பு சம்பந்தமாகவும் உயர்கல்வி சம்பந்தமாகவும் பார்க்க வேண்டும். படிப்பில் கவனம் செலுத்தி நல்ல மதிப்பெண்களை பெற வேண்டும். பெற்றோருக்கும் பள்ளிக்கும் பெருமை சேர்க்கும் வகையில் பள்ளி 100% தேர்ச்சி பெற அனைவரும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். இதைத்தொடர்ந்து திருவட்டாரில் கட்டப்பட்டு வரும் பஸ் நிலையம், போலீஸ் நிலையம் உள்ளிட்ட வளர்ச்சித் திட்டப் பணிகளை கலெக்டர் பார்வையிட்டார். ஆய்வின்போது பத்மநாபபுரம் சப்கலெக்டர் வினய்குமார் மீனா, தாசில்தார் கந்தசாமி உட்பட பலர் கலந்துகொண்டனர்.

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here