“அதிரடியாக விளையாடி விரைவாக ஆட்டமிழப்பதில் எந்த பலனும் இல்லை” – மனம் திறக்கிறார் திலக் வர்மா

0
14

இந்​திய அணி கிரிக்​கெட் அணி ஜிம்​பாப்​வே​யில் சுற்​றுப்​பயணம் செய்து டி20 தொடரில் விளை​யாட உள்​ளது.

இதனிடையே நேற்று ஹராரே மைதானத்​தில் செய்தியாளர்களிடம் இந்​திய அணி​யின் துணை கேப்​டன் திலக் வர்மா கூறிய​தாவது: அயர்​லாந்​து, இங்​கிலாந்து அணி​களு​ட​னான தொடரின்​போது ‘பவர் பிளே’ ஓவர்​களில் நான்கு அல்​லது ஐந்து விக்​கெட்​களை நாங்​கள் இழந்து விட்​டோம். இதனால் அதிலிருந்து மீற முடி​யாமல் போய்​விட்​டது.

எனவே, நடு​வரிசை​யில் வரும் வீரர்​கள் தங்​களது இயல்​பான ஆட்டத்தை வெளிப்​படுத்த முடிய​வில்​லை. களமிறங்கியவுடனேயே அதிரடி​யாக ஆடி ஆட்​ட​மிழந்து வெளி​யேறு​வ​தில் எந்​த​வித பயனும் இல்​லை. ஆட்​டத்​தின் தொடக்கத்திலிருந்தே அதிரடி​யாக ஆட விரும்​பி​னாலும், சில சமயங்​களில் சற்று நிதானத்​துட​னும் விவேகத்​துட​னும் செயல்பட வேண்​டியது அவசி​யம்.

இங்​கிலாந்​து, அயர்​லாந்து நாடு​களில் உள்ள ஆடு​களச் சூழல்களில் களமிறங்​கிய உடனேயே அடித்து ஆட முடி​யாது. அதே சமயம், அணிக்​காக எது தேவையோ அதைச் செய்​வதையே நான் எப்​போதும் கொள்​கை​யாகக் கொண்​டுள்​ளேன். அணிக்​காக நிதான​மாக விளை​யாட வேண்​டிய சூழல் இருந்​தால் அதற்​கேற்ப ஆடு​வேன். அதிரடி​யாக விளை​யாட வேண்​டிய சூழல் ஏற்​பட்​டால் அப்​படித்​தான் விளை​யாடு​வேன். இதனால்​தான் கடந்த சில ஆட்டங்​களில் எனது ஸ்டிரைக் ரேட் குறைந்​துள்​ளது.

களமிறங்​கும்​போது முதல் பந்​தையே அடித்து விளை​யாட முடி​யும் என்​பது​தான் என் மனதில் எப்​போதும் இருக்​கும். ஆனால் அதே நேரத்​தில், நான் நாட்​டுக்​காக விளை​யாடு​கிறேன். துணை கேப்டனாக எனக்கு நிறைய பொறுப்​பு​கள் உள்​ளன. அணி​யின் துணை கேப்​ட​னாக நான் பொறுப்பை உணர்ந்து விளை​யாட வேண்​டிய அவசி​யம் உள்​ளது.

அணி​யின் கேப்​ட​னாக ஸ்ரேயஸ் ஐயர் சிறப்​பாக வழிநடத்தி வருகிறார். கேப்​டன் பொறுப்பு என்று வரும்​போது இயல்​பாகவே ஒரு​வர் மீது பொறுப்​பு​களும் எதிர்​பார்ப்​பு​களும் இருக்​கும். அதே வேளை​யில், அயர்​லாந்து நாட்​டில் நாங்​கள் விளை​யாடும்​போது சூழல் முற்​றி​லும் மாறு​பட்​ட​தாக இருந்​தது. தற்​போது ஜிம்​பாப்வேயுடன் டி20 தொடரில் விளை​யாட உள்​ளோம்.

ஜிம்​பாப்வே அணி​யினர் நிச்​ச​யம் சவால் அளிக்​கக்​கூடிய வகையில் விளை​யாடு​வார்கள். கடந்த ஆண்டு ஜிம்பாப்வேயுடனான தொடரில் அவர்​கள் முதல் ஆட்​டத்​திலேயே வென்​றனர். எனவே, ஜிம்​பாப்​வே​யுட​னான இந்த சர்​வ​தேச டி20 தொடர் கடின​மாக இருக்​கும். கடந்த முறை நாங்​கள் ஆடிய​போது ஆடு​களங்​கள் சிறப்​பாக இருந்​தன. கடந்த ஆண்டு ஜிம்பாப்வேயில் நாங்​கள் விளை​யாடிய​போது எங்​கள் ஜூனியர் அணி​யும் அங்கு வந்​திருந்​தது. அந்த அணி​யில் இடம் ​பெற்​றிருந்த பல வீரர்​கள் இப்​போது சீனியர் அணி​யில் உள்​ளனர்.

ஜிம்​பாப்​வே​யில் ஆடு​களம் எவ்​வாறு செயல்​படும் என்​பது குறித்து நான் ஜூனியர் அணி​யில் இருந்த வைபவ் சூர்​ய​வன்ஷி உள்​ளிட்​டோரிடம் பேசினேன். இங்குள்ள மைதானங்​களைப் பொறுத்தவரை, அதன் பரப்​பளவு மிக​வும் பெரிய​தாக இருக்​கும். இங்​குள்ள சீதோஷ்ண நிலை​யும் முற்​றி​லும் வித்​தி​யாச​மானது. இங்கு காற்​றும் குளிரும் அதி​க​மாக நில​வு​கிறது. இங்கு ஏற்​க​னவே விளையாடிய அனுபவம்​ எங்​களுக்​கு ஒரு சாதக​மாக அமை​யும்​. இவ்​வாறு அவர்​ தெரிவித்​தார்​.

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here