Home உலக செய்திகள் ஈரானுடனான போரில் 81 போர் விமானம், 45 ட்ரோன்கள் வீழ்த்தப்பட்டதால் அமெரிக்காவுக்கு ரூ.32 ஆயிரம் கோடி...

ஈரானுடனான போரில் 81 போர் விமானம், 45 ட்ரோன்கள் வீழ்த்தப்பட்டதால் அமெரிக்காவுக்கு ரூ.32 ஆயிரம் கோடி இழப்பு

0

ஈ​ரானில் இந்த ஆண்​டின் தொடக்​கத்​தில் போர் தொடங்​கிய​தில் இருந்து அமெரிக்கா​வின் 81 ராணுவ விமானங்கள் மற்​றும் 45 ட்ரோன்கள் சுட்டு வீழ்த்​தப்​பட்​டுள்​ளன. இதன் மொத்த மதிப்பு சுமார் ரூ.32 ஆயிரம் கோடி என மதிப்​பீடு செய்​யப்​பட்​டுள்​ளது.

இதுதொடர்​பாக, அமெரிக்க காங்​கிரஸின் ஆய்வு சேவை (சிஆர்எஸ்) வெளி​யிட்​டுள்ள அறிக்​கை​யில் கூறி​யிருப்​ப​தாவது: ஈரானுக்கு எதி​ராக அமெரிக்கா தொடர்ந்து போரில் ஈடு​பட்டு வருகிறது. இதனால், இரு நாடு​களுக்​கும் இழப்பு ஏற்​படு​கிறது. ஈரானில் போர் தொடங்​கிய​தில் இருந்து அமெரிக்​கா​வின் 81 ராணுவ விமானங்​கள் மற்​றும் 45 ட்ரோன்​கள் சுட்டு வீழ்த்தப்பட்டுள்​ளன. அமெரிக்​கா​வின் மேம்​பட்ட போர் விமானங்களான எப்​-35ஏ லைட்​னிங் 2, எப்​-15 மற்​றும் எம்க்​யூ-9 ரீப்பர் ட்ரோன்​கள் உள்​ளிட்​டவை இந்த இழப்​பில் அடங்​கும்.

ஒவ்​வொரு எப்​-15 போர் விமானத்​தின் மதிப்பு 30 மில்​லியன் டாலருக்​கும் அதி​க​மாகும். எம்க்​யூ-9 ரீப்​பர் ட்ரோன்​களின் மதிப்பு தலா 30 முதல் 50 மில்​லியன் டாலர் வரை இருக்​கும் என மதிப்பிடப்பட்​டுள்​ளது. அமெரிக்​கா​வின் நவீன 5-ம் தலை​முறை போர் விமானங்​களில் ஒன்​றான எப்​-35ஏ-​யின் மதிப்பு 92 மில்லியன் டாலருக்​கும் அதி​க​மாகும்.

மேலும், அமெரிக்​கப் படைகள் 12 எப்​-15இ விமானங்​கள், ஒரு எப்​-35ஏ லைட்​னிங் 2 போர் விமானம், 2 ஏ-10 தண்​டர்​போல்ட் தரைத்​தாக்​குதல் விமானங்​கள் மற்​றும் 7 கேசி-135 ஸ்ட்​ராடோடேங்​கர் வான்​வழி எரிபொருள் நிரப்​பும் விமானங்​களை இழந்​துள்​ளன. போரின்​போது அமெரிக்கா ஒரு ஏஎச்​-64 அப்​பாச்சி தாக்​குதல் ஹெலி​காப்​டர், 4 ஏச்-6 லிட்​டில் பேர்ட் இலகுரக தாக்​குதல் ஹெலிகாப்​டர்​கள் மற்​றும் ஒரு எம்​எச்​-60 சீஹாக் கடற்​படை ஹெலி​காப்​டரை​யும் இழந்​துள்​ளது. மொத்​தத்​தில், இப்​போ​ரால் அமெரிக்கா​வுக்கு 3.3 பில்​லியன் டாலர் (ரூ.32 ஆயிரம் கோடி) இழப்பு ஏற்​பட்​டுள்​ளது.

இதற்​கிடையே, ஈரானுக்கு எதி​ரான போரில் அமெரிக்க ராணுவம் பயன்​படுத்​திய ஆயுதங்​களுக்​கான செல​வும் ஒரே மாதத்​தில் 6 பில்லியன் டாலருக்​கும் மேல் அதி​கரித்​துள்​ளது. இவ்​வாறு அதில் தெரிவிக்​கப்​பட்​டுள்​ளது. எனினும், இந்த அறிக்கை குறித்து வெள்ளை மாளி​கை​யும், அமெரிக்க பாது​காப்​புத் துறை​யும்​ இது​வரை எந்​தக்​ கருத்​தும்​ தெரிவிக்​கவில்​லை.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version