நாகர்கோவிலின் செட்டிகுளம் பகுதியில், போக்குவரத்து நெரிசல் மிகுந்த இடத்தில் கழிவுநீர் ஓடையின் மேல் பகுதி உடைந்து கிடக்கிறது. தினசரி ஏராளமான மக்கள் மற்றும் வாகனங்கள் செல்லும் இந்தப் பகுதியில், உடைந்து கிடக்கும் ஓடை விபத்துகளை ஏற்படுத்தும் அபாயம் உள்ளது. பொதுமக்கள் உடனடியாக அதனை சீரமைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர். இதுவரை சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்படாதது பொதுமக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.














