தள்ளிப் போனது ‘கார்த்தி 29’ பட ஷூட்டிங்!

0
394

நடிகர் கார்த்தி, ‘சர்தார் 2’ படத்தில் நடித்து முடித்திருக்கிறார். பி.எஸ்.மித்ரன் இயக்கியுள்ள இதில் ஆஷிகா ரங்கநாத், மாளவிகா மோகனன் என பலர் நடித்துள்ளனர்.

இதையடுத்து அவர் நடித்துள்ள ‘வா வாத்தியார்’ படத்தின் படப்பிடிப்பு முடிவடையவில்லை. இன்னும் 10 நாட்கள் பாக்கி இருக்கிறது. இதற்கிடையே நடிகரும் இயக்குநருமான ‘டாணாக்காரன்’ தமிழ் இயக்கத்தில் கார்த்தி நடிக்க இருக்கும் படத்தின் அறிவிப்பு கடந்த சில மாதங்களுக்கு முன் வெளியானது.

கார்த்தியின் 29-வது படமான இதன் படப்பிடிப்பு இந்த மாதம் தொடங்குவதாக இருந்தது. இந்நிலையில் அடுத்த மாதத்துக்குத் தள்ளிப் போயிருக்கிறது. இந்தப் படத்துக்காக ராமேஸ்வரத்தில் பிரம்மாண்ட கிராமம் செட் போடப்பட்டு வருகிறது.

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here