காமராஜர் காலை உணவு திட்டத்தில் உணவு தயாரிப்புக்கு 3 ஆண்டு டெண்டர் கோரியது நகராட்சி நிர்வாகத் துறை

0
20

​காமராஜர் காலை உணவு திட்​டத்​தில், 3 ஆண்டு உணவு தயாரிப்​புக்கு தகுதி வாய்ந்த நிறு​வனங்​களிடம் இருந்து நகராட்சி நிர்​வாகத் துறை டெண்​டர் கோரி​யுள்​ளது.

தமிழகத்​தில் அரசு பள்​ளி​களில் 1 முதல் 5-ம் வகுப்பு வரை பயிலும் குழந்​தைகளுக்கு காலை சிற்​றுண்டி வழங்​கும் வகை​யில், முதல்​வரின் காலை உணவுத் திட்​டம் கடந்த 2022-ம் அண்டு செப்​டம்​பர் மாதம் தொடங்​கப்​பட்​டது.

தொடர்ந்​து, அரசு உதவி பெறும் பள்​ளி​களுக்கு இத்​திட்​டம் விரிவுபடுத்​தப்​பட்ட நிலை​யில், தவெக அரசு பொறுப்​பேற்ற பின் ‘பெருந்​தலை​வர்

காம​ராஜர் காலை உணவுத் திட்​டம்’ என பெயர் மாற்​றப்​பட்​டு, விரி​வாக்​கம் செய்​வதற்​காக ரூ.217 கோடி நிதி​யும் ஒதுக்​கீடு செய்​யப்​பட்டு அரசாணை வெளி​யிடப்​பட்​டது.

இத்​திட்​டத்​தின் மூலம், 3 மாநக​ராட்​சிகளில் உள்ள 3 ஒருங்​கிணைக்​கப்​பட்ட சமையல் கூடங்​கள் மற்​றும் 112 நகராட்​சிகளில் உள்ள 113 ஒருங்​கிணைக்​கப்​பட்ட சமையல் கூடங்​கள் வாயி​லாக, அரசு மற்​றும் அரசு உதவி பெறும் பள்​ளி​களில் 1 முதல் 8-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்​களுக்கு அனைத்து பள்ளி நாட்​களி​லும் அடுத்த 3 ஆண்​டு​களுக்கு காலை உணவு வழங்​கப்​பட​வுள்​ளது.

இதையொட்​டி, காலை உணவு தயாரித்து வழங்​கு​வதற்​கான தகுதி வாய்ந்த உணவு தயாரிப்பு நிறு​வனங்​கள், சுய உதவிக் குழுக்​கள், நகர் அல்​லது பகு​தி​வாரி​யான குழுக்​கள், தொண்டு நிறு​வனங்​கள், சமு​தாய சேவை குழுக்​கள், துவக்க நிலை​யில் உள்ள நிறு​வனங்​கள் மற்​றும் நடை​முறை​யில் உள்ள நிறு​வனங்​களிட​மிருந்து தமிழக அரசின் நகராட்சி நிர்​வாகத் துறை டெண்​டர் கோரி​யுள்​ளது.

இப்​பணிக்​கான குறைந்​த​பட்ச மதிப்பு ரூ.37 லட்​சம் என்​றும், அதி​கபட்ச மதிப்பு ரூ.9.20 கோடி என்​றும் நிர்​ண​யிக்​கப்​பட்​டுள்​ளது. ஒப்​பந்​த​புள்​ளிக்​கான ஆவணங்​களை www.tntenders.gov.in என்ற இணை​யதளத்​தில் வரும் 27-ம் தேதி முதல் பதி​விறக்​கம் செய்​து கொள்​ளலாம்.

ஒப்​பந்​த​தா​ரர்​களுக்​கான முன் கலந்​தாய்​வுக் கூட்​டம் வரும் ஆக. 3-ம் தேதி காலை 11 மணி​யள​வில் சம்​பந்​தப்​பட்ட மாநக​ராட்சி மற்​றும் நகராட்சி வளாகங்​களில் நடை​பெறும். ஒப்​பந்​தப்​புள்ளி ஆவணங்​களை ஆக.14-ம் தேதி மாலை 3 மணிக்​குள் சமர்ப்​பிக்​க வேண்​டும்​ என தெரிவிக்​கப்​பட்​டுள்​ளது.

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here