தமிழக பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் நாகர்கோவிலில் நேற்று செய்தியாளர்களிடம் பேசுகையில், குமரி மாவட்டத்தில் 2 லட்சத்து 99 ஆயிரம் பேர் மகளிர் உரிமைத்தொகை பெற்று வருவதாகவும், விடுபட்டவர்களுக்கு மனுக்கள் பெறப்பட்டு பரிசீலிக்கப்பட்டு இன்று மகளிர் உரிமைத்தொகை வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். மக்களை மகிழ்விப்பது முதலமைச்சரின் கடமை என்றும், அதை அவர் சிறப்பாக செய்து வருவதாகவும் அவர் கூறினார்.














