தக்கலை: அடித்து நொறுக்கப்பட்ட டாஸ்மாக் கடை..பணம் கொள்ளை

0
150

தக்கலை அருகே கீழக்கல்குறிச்சியில் அரசு மதுபான கடை உள்ளது. இந்த கடை வழக்கம் போல் இரவு பூட்டிவிட்டு சென்றனர். நேற்று காலை கடையை திறக்க மேற்பார்வையாளர் ஸ்ரீகுமார் வந்தபோது கடையின் ஷட்டர் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. கடையின் உள்ளே சென்று பார்த்தபோது மதுபாட்டில்கள் வைக்கப்பட்டிருந்த அட்டைகள் தாறுமாறாக சிதறி காணப்பட்டது. 

மேலும் பணப்பெட்டி உடைக்கப்பட்டு அதிலிருந்து 19,000 ரூபாய் திருடப்பட்டிருந்தது. மேலும் ரூபாய் 50,920 மதிப்பிலான பல்வேறு ரகங்களைச் சேர்ந்த 229 மது பாட்டில்கள் கொள்ளையடிக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. இதுகுறித்து ஸ்ரீகுமார் தக்கலை போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here