மே.இ.தீவுகளுக்கு எதிரான டெஸ்ட்: 2-வது இன்னிங்ஸில் வங்கதேசம் தடுமாற்றம்

0
37

வங்கதேசம் – மேற்கு இந்தியத் தீவு​கள் இடை​யி​லான முதல் டெஸ்ட் கிரிக்​கெட் போட்டி மிர்​பூரில் நடை​பெற்று வருகிறது. இதன் முதல் இன்​னிங்​ஸில் வங்​கதேச அணி 272 ரன்கள் எடுத்து ஆட்​ட​மிழந்​தது. அதி​கபட்​ச​மாக ஷத்​மான் இஸ்​லாம் 105 ரன்​கள் சேர்த்​தார். இதையடுத்து விளை​யாடிய மேற்கு இந்​தி​யத் தீவு​கள் அணி 2-வது நாள் ஆட்​டத்​தின் முடி​வில் 4 விக்​கெட்​கள் இழப்​புக்கு 134 ரன்​கள் எடுத்​திருந்​தது.

டேக்​நரைன் சந்​தர்​பால் 43, ஜஸ்​டின் கிரீவ்ஸ் 15 ரன்​களு​டன் களத்​தில் இருந்​தனர். நேற்று 2-வது நாள் ஆட்​டத்தை தொடர்ந்து விளை​யாடிய மேற்கு இந்​தி​யத் தீவு​கள் அணி 82.5 ஓவர்​களில் 245 ரன்​களுக்கு ஆட்​ட​மிழந்​தது. சந்​தர்​பால் 56, ஜஸ்​டின் கிரீவ்ஸ் 46 ரன்​களில் அவுட் ஆனார்​கள். ஜோஷுவா பிஷப் 15, ஷமர் ஜோசப் 4 ரன்​களி​லும் ஜோமல் வாரிக்​கன், ஜெய்​டன் சீல்ஸ் ஆகியோர் ரன் ஏதும் எடுக்​காமலும் நடையை கட்​டினர்.

கேப்​டன் ராஸ்​டன் சேஸ் 43 ரன்​கள் சேர்த்து ஆட்​ட​மிழக்​காமல் இருந்​தார். வங்​கதேச அணி தரப்​பில் நயீம் ஹசன் 4 விக்​கெட்​களை வீழ்த்​தினார். தைஜுல் இஸ்​லாம், மெஹதி ஹசன் மிராஸ் ஆகியோர் தலா 2 விக்​கெட்​களை கைப்​பற்​றினர். 27 ரன்​கள் முன்​னிலை​யுடன் 2-வது இன்​னிங்ஸை விளை​யாடிய வங்​கதேச அணி 3-வது நாள் ஆட்​டத்​தின் முடி​வில் 6 விக்​கெட் இழப்​புக்கு 79 ரன்​கள் எடுத்​திருந்​தது.

ஷத்​மான் இஸ்​லாம் 13, தன்​ஷித் ஹசன் தமீம் 0, நஜ்​முல் ஹொசைன் ஷான்டோ 10, தவுஹித் ஹிர்​தோய் 0, லிட்​டன் தாஸ் 4, மெஹதி ஹசன் மிராஸ் 9 ரன்​களில் ஆட்​ட​மிழந்​தனர். ஜாக்​கர் அலி, நயீம் ஹசன் ஆகியோர் தலா 18 ரன்​களு​டன் ஆட்​ட​மிழக்​காமல் களத்​தில் இருந்​தனர். மேற்கு இந்​தி​யத் தீவு​கள் அணி சார்​பில் ராஸ்​டன் சேஸ் 3, ஜோமல் வாரிக்​கன் 2, ஷமர் ஜோசப் ஒரு விக்​கெட்​டைக் கைப்​பற்​றினர். கைவசம் 4 விக்​கெட்​கள் இருக்க 106 ரன்​கள் முன்​னிலை பெற்​றுள்ள வங்​கதேச அணி இன்று 4-வது நாள் ஆட்​டத்தை எதிர்​கொள்​கிறது.

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here