ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட்: தென் ஆப்பிரிக்க அணி போராட்டம்

0
39

தென் ஆப்பிரிக்கா – ஆஸ்திரேலியா அணிகள் இடையி​லான 3-வது மற்​றும் கடைசி டெஸ்ட் போட்டி கேப் டவுன் நகரில் நடை​பெற்று வரு​கிறது. இதன் முதல் இன்​னிங்​ஸில் தென் ஆப்​பி​ரிக்க அணி 329ரன்​களும் ஆஸ்திரேலிய அணி429 ரன்களும் குவித்​தன.

100 ரன்​கள் பின்​தங்​கிய நிலை​யில் 2-வது இன்​னிங்ஸை விளையாடிய தென் ஆப்​பி​ரிக்க அணி 3-வது நாள் ஆட்​டத்​தின் முடி​வில் 47 ஓவர்​களில் 4 விக்​கெட்​கள் இழப்​புக்கு 140 ரன்​கள் எடுத்திருந்​தது. மேத்யூ பிரீட்​ஸ்கே 19, ரியான் ரிக்​கெல்​டன் 19 ரன்களு​டன் ஆட்​ட​மிழக்​காமல் இருந்​தனர். நேற்று 4-வது நாள் ஆட்டத்தை தென் ஆப்​பி​ரிக்க அணி தொடர்ந்து விளை​யாடியது. மேத்யூ பிரீட்​ஸ்கே 43 ரன்​கள் எடுத்த நிலை​யில் ஆட்​ட​மிழந்​தார்.

இதையடுத்து களமிறங்​கிய வியான் முல்​டர், ரியான் ரிக்கெல்டனுடன் இணைந்து பார்ட்​னர்​ஷிப்பை கட்​டமைக்க முயற்​சித்​தார். ரியான் ரிக்​கெல்​டன் 101 ரன்களில் ஆட்டமிழந்தார். 131 ஓவர்​கள் வீசப்​பட்ட நிலை​யில் தென் ஆப்​பி​ரிக்க அணி 9 விக்கெட்​கள் இழப்​புக்கு 371 ரன்​கள் எடுத்திருந்​தது. ரபாடா 2, வியான் முல்​டர் 98 ரன்​களு​டன் களத்​தில் இருந்தனர்.ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியில் பந்தை பவுண்டரிக்கு விரட்டிய ரியான் ரிக்கெல்டன்.

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here