திருவட்டாறு அருகே கோயில் காணிக்கைப் பெட்டியை உடைத்து திருட்டு

0
41
திருவட்டாறு இட்டகவேலி நீலகேசி அம்மன் கோயில் காணிக்கைப் பெட்டி உடைத்து ரூ.20 ஆயிரம் திருட்டு
இட்டகவேலி நீலகேசி அம்மன் கோயில் காணிக்கைப் பெட்டியை உடைத்து பணம் திருட்டு; மர்ம நபர்களுக்கு போலீஸார் வலைவீச்சு. நகலெடுக்க

திருவட்டாறு அருகே இட்டகவேலி நீலகேசி அம்மன் கோயிலின் காணிக்கைப் பெட்டியை உடைத்து பணத்தை திருடிச் சென்றவா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

குலசேகரம் – திருவரம்பு சாலையில் இட்டகவேலி ஈழக்குடிவிளையில் உள்ள நீலகேசி அம்மன் கோயிலின் வரவேற்பு வளைவின் அருகே காணிக்கைப் பெட்டி உள்ளது. அதை புதன்கிழமை இரவு, மா்ம நபா்கள் உடைத்து, அதிலிருந்த சுமாா் ரூ. 20 ஆயிரத்தை திருடிச் சென்றனராம்.

மேலும், அதே பகுதியில் இருசக்கர வாகனத்தில் தலைக்கவசம் அணிந்து வந்த இருவா், நகை அடகு கடையின் பூட்டை இரும்புக் கம்பியால் உடைக்க முயன்றுள்ளனா். பூட்டை உடைக்க முடியாததால் விட்டு சென்ற காட்சி அங்குள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளது.

இச்சம்பவங்கள் குறித்து திருவட்டாறு காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து, மா்ம நபா்களைத் தேடி வருகின்றனா்.

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here