தமிழ்​நாடு ஹாக்கி லீக் போட்டி: விளை​யாட்டு விடுதி அணி வெற்றி

0
28

தமிழ்​நாடு ஹாக்கி லீக் போட்​டி​யின் லீக் ஆட்​டத்​தில் சிறப்பு விளை​யாட்டு விடு​தி (ஸ்​போர்ட்ஸ் ஹாஸ்​டல் ஆஃப் எக்சலன்​ஸ்) அணி வெற்றி பெற்​றது. இப்​போட்​டிகள் சென்னை எழும்பூர் மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடி​யத்​தில் நடை​பெற்று வருகின்றன.

நேற்று நடை​பெற்ற லீக் ஆட்​டத்​தில் சிறப்பு விளை​யாட்டு விடுதி அணி 2-1 என்ற கோல் கணக்​கில் ஜிஎஸ்டி அன்ட் சென்​டிரல் எக்சைஸ் அணியை வீழ்த்​தி​யது. விளை​யாட்டு விடுதி அணி சார்​பில் எஸ். விஷால், எஸ். கிருஷ்ணன் ஆகியோர் தலா ஒரு கோலடித்தனர். ஜிஎஸ்டி அன்ட் எக்​சைஸ் அணி சார்​பில் கே.விக்னேஷ் ஒரு கோலடித்​தார்.

இன்று பிற்​பகல் 2.30 மணிக்கு நடை​பெறும் லீக் ஆட்​டத்​தில் ஏஜிஓஆர்சி அணி​யும், ஃபுட் கார்ப்​பரேஷன் ஆஃப் இந்​தியா அணியும் மோதுகின்​றன.மாலை 4 மணிக்கு நடை​பெறும் மற்றொரு ஆட்​டத்​தில் இந்​தி​யன் ஓவர்​சீஸ் வங்​கி​யும், தியான் வீரன்ஸ் அணியும் பலப்​பரீட்சை நடத்​தவுள்​ளன.

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here