12 அணிகள் பங்கேற்கும் ‘தமிழ் ஹாக்கி லீக்’ நாளை தொடக்கம்

0
31

ஹாக்கி திரு​வள்​ளூர் சார்​பில் ‘தமிழ் ஹாக்கி லீக் 2026’ தொடர் சென்னை எழும்​பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் மைதானத்​தில் நாளை (9-ம் தேதி) தொடங்​கு​கிறது.

இந்​தத் தொடரில் 12 ஆடவர் அணி​கள் கலந்து கொள்​கின்​றன. இந்​தத் தொடர் வரும் செப்​டம் 12 வரை 35 நாட்​கள் நடை​பெறுகிறது. முதன்​முறை​யாக 4 அணி​கள் பங்​கேற்​கும் மகளிர் மினி லீக்​கும் நடத்​தப்பட உள்​ளது.

ஆட​வர் பிரி​வில் கலந்து கொள்​ளும் 12 அணி​கள் 2 பிரிவு​களாக பிரிக்​கப்​பட்​டுள்​ளன. ‘ஏ’ பிரி​வில் இந்​தி​யன் வங்​கி, வரு​மான வரித்​துறை, தெற்கு ரயில்​வே, எஸ்​.எம். நகர், ஜி.எஸ்​.டி & மத்​திய கலால் துறை, விளை​யாட்டு விடுதி சிறப்பு மையம் ஆகிய அணி​கள் இடம்​பெற்​றுள்​ளன.

‘பி’ பிரி​வில் இந்​தி​யன் ஓவர்​சீஸ் வங்​கி, ஏ.ஜி.ஓ.ஆர்​.சி. தியான் வீரன்​ஸ், பட்​டாபி​ராம் ஸ்டிரைக்​கர்​ஸ், இந்​திய உணவுக் கழகம், ஐசிஎஃப் ஆகிய அணி​களும் இடம் பெற்​றுள்​ளன.

மொத்​தம் 30 லீக் போட்​டிகள் நடை​பெறுகின்​றன. லீக் சுற்​றின் முடி​வில் இரு பிரிவு​களி​லும் தலா 3 இடங்​களை பிடிக்​கும் அணி​கள் சூப்​பர் 6 சுற்​றுக்கு முன்​னேறும். இந்த சுற்​றில் இருந்து 4 அணி​கள் பிளேஆஃப் சுற்​றுக்கு முன்​னேறும்.

பிளேஆஃப் சுற்​றில் குவாலிஃபையர் 1, குவாலிஃபையர் 2 மற்​றும் எலிமினேட்​டர் போட்​டிகள் நடை​பெறும். இதன் முடி​வில் வெற்றி பெறும் அணி​கள் இறு​திப் போடடி​யில் பலப்​பரீட்சை நடத்​தும். எலிமினேட்​டர் போட்​டி​யும், இறு​திப் போட்​டி​யும் மின்​னொளி​யில் நடை​பெற உள்​ளன.

இந்த போட்டி தொடர்​பான அறி​விப்பு நிகழ்ச்சி மற்​றும் கோப்பை அறி​முகம் நேற்று மேயர் ராதாகிருஷ்ணன் மைதானத்​தில் நடை​பெற்​றது. இதில், ஒலிம்​பிக்​கில் தங்​கப் பதக்​கம் வென்ற இந்​திய ஹாக்கி அணி​யின் முன்​னாள் கேப்​ட​ன் வாசுதேவன் பாஸ்​கரன், லீக்​கின் தலை​வர் டாக்​டர் பிர​காஷ் அய்​யாதுரை, தொழில்​நுட்ப அதி​காரி மொகுல் முகமது முனீர் உள்​ளிட்​டோர் கலந்து கொண்​டனர்.

இந்த தொடரில் வெற்றி பெறும் அணிக்கு ரூ.1 லட்​சம் பரிசுத் தொகை வழங்​கப்பட உள்​ளது. 2-வது இடம் பெறும் அணி ரூ.50 ஆயிரம் பரிசுத் தொகையை பெறும். தொடக்க நாளில் (9-ம் தேதி) பிற்​பகல் 2.30 மணிக்கு நடை​பெறும் முதல் ஆட்​டத்​தில்​ ஜிஎஸ்​டி – விளை​யாட்​டு விடு​தி சிறப்​பு மையம்​ அணி​கள்​ மோதுகின்​றன.

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here