தக்கலை:   போலி செக் மோசடி 2 பேர் மீது வழக்கு

0
453

தக்கலை பகுதியைச் சேர்ந்தவர் மனோஜ் ஜோசப் (57). இவர் மாலத்தீவில் ஆசிரியராகப் பணியாற்றுகிறார். இவருக்குச் சொந்தமாக 20 ஏக்கர் 10 சென்ட் நிலம் இருந்தது. இந்த நிலத்தை அப்பட்டு விளைச் சேர்ந்த ரமேஷ் (47) என்பவர் தனது உறவினர் என கூறி, அதங்கோடு பகுதியைச் சேர்ந்த பிரேமச்சந்திரன் மனைவி ஷாலினி (35) என்பவருக்கு விலைக்கு வாங்குவதாக மூன்று கோடி 25 லட்சம் விலை பேசப்பட்டு, முன்பணமாக 25 லட்சம் கொடுக்கப்பட்டது. மீதிப் பணமான 3 கோடிக்கு மூன்று காசோலைகள் கொடுத்து சொத்தை எழுதி வாங்கினார். அப்போது சொத்தை அடமானம் வைத்து மூன்று கோடியை கொடுப்பதாக கூறினார். கூறியபடி பணம் கொடுக்கவில்லை. மேலும் கொடுத்த காசோலைகள் போலி என்பது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து மனோஜ் ஜோசப் தக்கலை போலீசில் புகார் செய்தார். போலீசார் ரமேஷ் மற்றும் ஷாலினி மீது மோசடி வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here