மின்வெட்டுக்கு ஊழியர் பற்றாக்குறையே காரணம்: மின்சார வாரிய தொழிலாளர் பொறியாளர் ஐக்கிய சங்கம் திட்டவட்டம்

0
21

 தமிழகத்​தில் நில​வும் மின்வெட்டு பிரச்​சனைக்கு ஊழியர்​கள் பற்​றாக்​குறை தான் காரணம் என தமிழ்​நாடு மின்​சார வாரிய தொழிலா​ளர் பொறி​யாளர் ஐக்​கிய சங்​கம் திட்​ட​வட்​ட​மாக தெரி​வித்​துள்​ளது.

சென்னை அண்ணா சாலை​யில் உள்ள மின்​வாரிய தலைமை அலு​வல​கம் பின்​புற வாயி​லில் தமிழ்​நாடு மின்​சார வாரிய தொழிலா​ளர் பொறி​யாளர் ஐக்​கிய சங்​கம் சார்​பில் ஒரு நாள் அடை​யாள உண்​ணா​விரத போராட்​டம் நேற்று நடந்​தது.

இதில் 500-க்​கும் மேற்​பட்ட ஊழியர்​கள் கலந்து கொண்டு அரசுக்கு எதி​ராக கண்டன கோஷங்​களை எழுப்​பினர். இதனை தொடர்ந்து அச்​சங்​கத்​தின் தலை​வர் சுப்​பிரமணி​யன் செய்​தி​யாளர்​களிடம் கூறிய​தாவது: தமிழ்​நாடு மின்​சார வாரி​யத்​தில் கிட்​டத்​தட்ட 40 ஆயிரம் கள உதவி​யாளர் பணி​யிடங்​கள் காலி​யாக உள்​ளன.

அதனை நிரப்​பாமல் ஒப்​பந்த அடிப்​படை​யில் கள உதவி​யாளர்​களை பணி​யமர்த்த உள்​ள​தாக அரசு கூறு​வது கண்​டனத்​திற்​குரியது.

தமிழகத்​தில் தற்​போது நில​வும் மின்​வெட்டு பிரச்​சனைக்கு ஊழியர்​கள் பற்​றாக்​குறை தான் காரணம். உயர்​ப​தவி​களை டிஎன்​பிஎஸ்சி மூலம் நிரப்​பி​விட்டு மக்​களை சந்​தித்து களத்​தில் பணி​யாற்​றும் ஊழியர்​களை ஒப்​பந்த அடிப்​படை​யில் நியமிப்​பது எந்​தவகை​யில் நியா​யம்.

இது​போல், நியமிக்​கப்​படும் ஊழியர்​கள் 5 ஆண்டு பணி​யாற்​றி​விட்டு அதன் பிறகு எப்​படி குடும்​பத்தை காப்​பாற்​று​வார். எனவே, ஒப்​பந்த அடிப்​படை​யில் ஆட்​களை நியமிக்​காமல் நிரந்தர வேலை வாய்ப்பை அரசு ஏற்​படுத்தி தர வேண்​டும்​. இவ்​வாறு கூறி​னார்.

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here