முன்னிலை பெற்றது இலங்கை: ராவல்பிண்டி டெஸ்ட் | PAK vs SL

0
37

பாகிஸ்​தான் – இலங்கை அணிகள் இடை​யி​லான முதல் டெஸ்ட் போட்டி ராவல்​பிண்​டி​யில் நடை​பெற்று வரு​கிறது. இதன் முதல் இன்​னிங்​ஸில் பாகிஸ்​தான் அணி 9 விக்​கெட்​கள் இழப்​புக்கு 434 ரன்​கள் குவித்து டிக்​ளேர் செய்​தது.

இதையடுத்து பேட் செய்த இலங்கை அணி 3-வது நாள் ஆட்​டத்​தின் முடி​வில் 102 ஓவர்​களில் 4 விக்​கெட்​கள் இழப்​புக்கு 404 ரன்​கள் குவித்​தது. தனஞ்​ஜெயா டி சில்வா 167 ரன்​களும், குஷால் மெண்​டிஸ் 117 ரன்​களும் விளாசி ஆட்​ட​மிழக்​காமல் இருந்​தனர். நேற்று 4-வது நாள் ஆட்​டத்தை தொடர்ந்து விளை​யாடிய இலங்கை அணி 117.2 ஓவர்​களில் 446 ரன்​கள் குவித்து ஆட்​ட​மிழந்​தது.

தனஞ்​ஜெயா டி சில்வா 167, குஷால் மெண்​டிஸ் 119 ரன்​களில் ஆட்​ட​மிழந்​தனர். பாகிஸ்​தான் அணி தரப்​பில் மிதவேகப்​பந்து வீச்​சாளரான சகிப் கான் 7 விக்​கெட்​களை வீழ்த்​தினார். 12 ரன்​கள் பின்​தங்​கிய நிலை​யில் 2-வது இன்​னிங்ஸை விளை​யாடிய பாகிஸ்​தான் அணி 21.2 ஓவர்​களில் ஒரு விக்​கெட் இழப்​புக்கு 57 ரன்​கள் எடுத்​திருந்த போது போதிய வெளிச்​சம் இல்​லாத காரணத்​தால் 4-வது நாள் ஆட்​டம் முடித்​துக்​கொள்​ளப்​பட்​டது.

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here