பாகிஸ்தான் – இலங்கை அணிகள் இடையிலான முதல் டெஸ்ட் போட்டி ராவல்பிண்டியில் நடைபெற்று வருகிறது. இதன் முதல் இன்னிங்ஸில் பாகிஸ்தான் அணி 9 விக்கெட்கள் இழப்புக்கு 434 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது.
இதையடுத்து பேட் செய்த இலங்கை அணி 3-வது நாள் ஆட்டத்தின் முடிவில் 102 ஓவர்களில் 4 விக்கெட்கள் இழப்புக்கு 404 ரன்கள் குவித்தது. தனஞ்ஜெயா டி சில்வா 167 ரன்களும், குஷால் மெண்டிஸ் 117 ரன்களும் விளாசி ஆட்டமிழக்காமல் இருந்தனர். நேற்று 4-வது நாள் ஆட்டத்தை தொடர்ந்து விளையாடிய இலங்கை அணி 117.2 ஓவர்களில் 446 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தது.
தனஞ்ஜெயா டி சில்வா 167, குஷால் மெண்டிஸ் 119 ரன்களில் ஆட்டமிழந்தனர். பாகிஸ்தான் அணி தரப்பில் மிதவேகப்பந்து வீச்சாளரான சகிப் கான் 7 விக்கெட்களை வீழ்த்தினார். 12 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2-வது இன்னிங்ஸை விளையாடிய பாகிஸ்தான் அணி 21.2 ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்புக்கு 57 ரன்கள் எடுத்திருந்த போது போதிய வெளிச்சம் இல்லாத காரணத்தால் 4-வது நாள் ஆட்டம் முடித்துக்கொள்ளப்பட்டது.
