Home விளையாட்டு செய்திகள் நட்​புரீதி​யி​லான போட்டி: கால்பந்தில் இந்திய அணி தோல்வி

நட்​புரீதி​யி​லான போட்டி: கால்பந்தில் இந்திய அணி தோல்வி

0

இந்​தியா – நியூஸிலாந்து கால்​பந்து அணிகள் இடை​யி​லான சர்​வ​தேச நட்​புரீதி​யி​லான போட்டி நேற்று ஆக்​லாந்​தில் நடை​பெற்​றது. இதில் நியூஸிலாந்து அணி 5-0 என்ற கோல் கணக்​கில் வெற்றி பெற்​றது.

5-வது நிமிடத்​தில் இந்​திய அணி​யின் வீரர் பிஜோய் வர்க்​கீஸ் சுய கோல் அடித்​தார். இத​னால் நியூஸிலாந்து 1-0 என முன்​னிலை பெற்​றது.

இதைத் தொடர்ந்து ஜெசி ராண்​டல் 34 மற்​றும் 43-வது நிமிடங்​களில் கோல் அடித்து மிரட்​டினார். இத​னால் நியூஸிலாந்து அணி முதல் பாதி​யில் 3-0 என வலு​வான முன்​னிலையை பெற்​றது. இதன் பின்​னர் 57-வது நிமிடத்​தில் கிறிஸ் வுட், 74-வது நிமிடத்​தில் லாக்​லான் பேலிஸ் ஆகியோர் தலா ஒரு கோல் அடித்து அசத்​தினர். இரு அணிகளும் மீண்​டும் ஒரு முறை வரும் 15-ம் தேதி மோதுகின்​றன. இந்த ஆட்​டம் கிறைஸ்ட்​சர்ச்​சில் நடை​பெறுகிறது.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version