ஸ்மிருதி, தீப்தி அபாரம்: பாகிஸ்தானை வீழ்த்தியது இந்தியா | Women’s T20 WC

0
24

நடப்பு ஐசிசி மகளிர் டி20 உலகக் கோப்பை கிரிக்​கெட் தொடரின் குரூப் சுற்று ஆட்டத்தில் பாகிஸ்தானை 64 ரன்களில் வீழ்த்தியது இந்திய அணி.

இந்த தொடர் இங்​கிலாந்​து மற்றும் வேல்ஸில் நடை​பெற்று வரு​கிறது. இந்​திய நேரப்​படி நேற்று இரவு 7 மணிக்கு எட்​க​பாஸ்​டன் மைதானத்​தில் நடை​பெற்ற குரூப்-ஏ ஆட்​டத்​தில் இந்​தி​யா, பாகிஸ்​தான் அணி​கள் மோதின.

முதலில் இந்​திய அணி விளை​யாடியது. தொடக்க ஆட்​டக்​காரர்​களாக ஷெபாலி வர்​மா, ஸ்மிருதி மந்​தனா ஆகியோர் களமிறங்​கினர். ஷெபாலி வர்மா 5 பந்​துகளில் 6 ரன்​கள் சேர்த்து ஆட்​ட​மிழந்​தார்.அதன் பின்​னர் வந்த ஜெமிமா ரோட்​ரிக்ஸ் ஒரு ரன்​னில் பெவிலியன் திரும்​பி​னார்.

ஸ்மிருதி விளாசல்: இதையடுத்து 3-வது விக்​கெட்​டுக்கு ஸ்மிரு​தி​யுடன் கேப்​டன் ஹர்​மன்​பிரீத் கவுர் ஜோடி சேர்ந்​தார். இந்த ஜோடி நிதானத்​துடன் விளை​யாடி ரன்​களைச் சேர்த்​தது. அதே​நேரத்​தில் ஸ்மிருதி மந்​தனா பவுண்​டரி​களாக விளாசித் தள்​ளி​னார்.

இதனிடையே ஹர்​மன்​பிரீத் கவுர் 35 பந்​துகளில் 36 ரன்​கள் சேர்த்து ஆட்​ட​மிழந்​தார். மறு​முனை​யில் நின்ற ஸ்மிருதி மந்​தனா 44 பந்​துகளில் 68 ரன்​கள் குவித்து (2 சிக்​ஸர், 9 பவுண்​டரி​கள்) வீழ்ந்​தார். பாரதி புல்​மாலி 1, ரிச்சா கோஷ் 34 ரன்​கள் சேர்த்து அவுட்​டா​யினர். கடைசி​யாக தீப்தி சர்மா 12 ரன்​களும், ஸ்ரே​யங்கா பாட்​டீல் ஒரு ரன்​னும் சேர்த்து ஆட்​ட​மிழக்​காமல் இருந்​தனர். 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 170 ரன்கள் எடுத்தது இந்தியா.

பாகிஸ்​தான் தரப்​பில் சாடியா இக்​பால், ஃபாத்​திமா சனா ஆகியோர் தலா 2 விக்​கெட்​களை​யும், டாஸ்​மியா ருபாப், ரமீன் ஷமிம் ஆகியோர் தலா ஒரு விக்​கெட்​டை​யும் சாய்த்​தனர். இதைத் தொடர்ந்து 171 ரன்​கள் எடுத்​தால் வெற்றி என்ற இலக்​குடன் பாகிஸ்​தான்​ மகளிர்​ அணி பேட்​டிங்​ செய்​ய ஆயத்​த​மானது.

அந்த அணி தொடக்கம் முதலே சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்தது. 77 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. அதன் பின்னர் அந்த அணியால் சரிவிலிருந்து மீண்டு வர முடியவில்லை.

தீப்தி அபாரம்: இந்திய அணி சார்பில் பந்து வீசிய தீப்தி சர்மா 4 ஓவர்களில் 10 ரன்கள் மட்டுமே கொடுத்து 5 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இதன் மூலம் மகளிர் டி20 உலகக் கோப்பை தொடரில் இரண்டாவது முறையாக 5+ விக்கெட்டுகளை ஒரே ஆட்டத்தில் கைப்பற்றினார் தீப்தி சர்மா. மேலும், சர்வதேச மகளிர் டி20 கிரிக்கெட்டில் அதிக விக்கெட்டுகள் (166) கைப்பற்றிய வீராங்கனையாக அவர் அறியப்படுகிறார். கடந்த ஆண்டு இந்தியாவில் நடைபெற்ற மகளிர் உலகக் கோப்பை தொடரில் தீப்தி சர்மா, பிளேயர் ஆப் தி சீரிஸ் விருதை வென்றது குறிப்பிடத்தக்கது.

அவருக்கு உறுதுணையாக செயல்பட்ட ஸ்ரீசரணி 3 விக்கெட்டுகளை கைப்பற்றி இருந்தார். சுழற்பந்து வீச்சு மூலம் பாகிஸ்தானின் 9 விக்கெட்டுகளை இந்தியா கைப்பற்றியது.

17 ஓவர்களில் 106 ரன்களுக்கு பாகிஸ்தான் அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதன் மூலம் 64 ரன்களில் இந்தியா வெற்றி பெற்றது. டி20 மகளிர் உலகக் கோப்பை தொடரில் பாகிஸ்தானுக்கு எதிராக 9 ஆட்டங்களில் விளையாடி 7 வெற்றிகளை பதிவு செய்து இந்தியா சாதனை படைத்துள்ளது. இந்த தொடரில் அடுத்த ஆட்டத்தில் ஜூன் 17-ம் தேதி அன்று நெதர்லாந்து அணி உடன் இந்தியா விளையாடுகிறது. அதன் பின்னர் தென் ஆப்பிரிக்கா, வங்கதேசம், ஆஸ்திரேலியா அணி உடன் இந்தியா விளையாட உள்ளது.

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here