“சின்ன படங்களுக்கு எப்போதும் ஆதரவு தேவை” – ‘மொத ராத்திரி’ இயக்குநர் வேண்டுகோள்

0
19

ரிஷி காந்த், அனிஷ்மா அனில்​கு​மார் முதன்மை கதா​பாத்​திரங்​களில் நடித்​துள்ள திரைப்​படம் ‘மொத ராத்​திரி’. ராஜா கருப்​ப​சாமி இயக்​கி​யுள்ள இதில் சேத்​தன், அப்​துல் லீ, பகவதி பெரு​மாள் உள்பட பலர் நடித்​துள்​ளனர். இப்​படம் ஆக. 21-ம் தேதி வெளி​யாகி வரவேற்​பைப் பெற்​றுள்​ளது. மைத்ரி மூவி மேக்​கர்ஸ் தயாரித்த இந்​தப்​படத்​தின் செய்​தி​யாளர்​கள் சந்​திப்பு சென்​னை​யில் நடை​பெற்​றது. படக்​குழு​வினர் கலந்​து​கொண்​டனர்.

இயக்​குநர் ராஜா கருப்​ப​சாமி கூறும்​போது, “6 வருடத்​துக்கு முன்​னால் இந்த கதையை எடுத்​துக்​கொண்டு அலைந்த போது எல்​லோரும் சொன்​னது, ரிஷி​காந்தை மாற்ற வேண்​டும் என்​பது​தான்.

ஆனால், இப்​போது தமிழ் சினி​மாவுக்கு சமூகப் பொறுப்​போடு கூடிய ஹீரோ கிடைத்​து​விட்​டார். சின்ன படங்​களுக்கு எப்​போதுமே ஆதரவு தேவை. அது மட்​டும் தான் தமிழ் சினி​மாவை அடுத்த கட்​டத்​துக்கு எடுத்​துச் செல்​லும்” என்​றார்.

நடிகர் பகவதி பெரு​மாள் பேசும்​போது, “சினி​மா​வில் 100 பேர் ஜெயித்​தால் லட்​சம் பேர் காணா​மல் போகிறார்​கள். இது போன்ற நல்ல படங்​கள் வெளி​யாகி வெற்றி பெற தயாரிப்​பாளர்​கள்​தான் முக்​கிய காரணம். பலருடைய வாழ்க்​கை​யில் இந்​தப் படம் ஒளி ஏற்றி இருக்​கிறது. சின்ன பட்​ஜெட்​டில் படம் செய்​பவர்​களுக்​குத் தான் பொறுப்பு உள்​ளது. அதை உணர்ந்து இப்​போது பல படங்​கள் வெளி​யாகின்​றன” என்​றார்​.

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here