இளையராஜா, ராமராஜன் இணையும் புதிய திரைப்படத்துக்கு ‘கடவுள் தந்த பரிசு’ என்று பெயரிடப்பட்டுள்ளது. அறிமுக இயக்குநர் காசிமாயன் கதை, திரைக்கதை எழுதி, இயக்குகிறார். வசனத்தை ராஜகோபால், எம்.அடைக்கலம் இருவரும் எழுதுகின்றனர். செந்தில், கோவை சரளா இருவரும் நீண்ட இடைவெளிக்குப் பிறகு, இதில் ராமராஜனுடன் இணைகின்றனர். இப்படத்தின் பணிகள் பாடல் பதிவுடன் தொடங்கியது. அதை தொடர்ந்து படப்பிடிப்புக்கான பணிகள் நடைபெற்று வருகின்றன.















