Home விளையாட்டு செய்திகள் ​தாய்லாந்து ஓபன் பாட்மிண்டன் 2-வது சுற்​றில் சிந்​து, ஸ்ரீகாந்த், லக்‌ஷயா சென்

​தாய்லாந்து ஓபன் பாட்மிண்டன் 2-வது சுற்​றில் சிந்​து, ஸ்ரீகாந்த், லக்‌ஷயா சென்

0

தாய்​லாந்​தின் பாங்​காக் நகரில் தாய்லாந்து ஓபன் பாட்மிண்டன் தொடர் நடை​பெற்று வரு​கிறது. இதில் ஆடவர் ஒற்றையர் பிரிவு முதல் சுற்​றில் இந்​திய வீரரான கிடாம்பி ஸ்ரீகாந்த், போட்​டித் தரவரிசை​யில் 8-வது இடத்​தில் உள்ள சிங்​கப்​பூரின் லோகீன் இயூவை எதிர்த்து விளை​யாடி​னார்.

30 நிமிடங்​கள் நடை​பெற்ற இந்த ஆட்​டத்​தில் ஸ்ரீகாந்த் 21-14, 21-15 என்ற நேர் செட் கணக்​கில் வெற்றி பெற்று 2-வது சுற்​றுக்கு முன்​னேறி​னார். 2-வது சுற்​றில் ஸ்ரீகாந்த், சீன தைபே​வின் சு லி யங்​குடன் மோதுகிறார். மற்​றொரு ஆட்​டத்​தில் லக் ஷயா சென் 21-16, 21-17 என்ற நேர் செட் கணக்​கில் சிங்​கப்​பூரின் ஜியா ஹெங் ஜேசனை வீழ்த்​தி​னார். மற்ற ஆட்​டங்​களில் இந்​தி​யா​வின் ஆயுஷ் ஷெட்டி 13-21, 21-17, 4-21 என்ற செட் கணக்​கில் போட்​டித் தரவரிசை​யில் 6-வது இடத்​தில் உள்ள ஜப்​பானின் கோடை நரோகா​விட​மும், தருண் மன்​னேப்​பள்ளி 12-21, 16-21 என்ற செட் கணக்​கில் ஜப்​பானின் கோகி வதனபே​விட​மும் தோல்வி அடைந்தனர்.

மகளிர் ஒற்​றையர் பிரிவு முதல் சுற்​றில் 2 முறை ஒலிம்​பிக்​கில் பதக்​கம் வென்ற இந்​தி​யா​வின் பி.​வி.சிந்​து, சீன தைபே​வின் துங்சியூ-​டாங்​குடன் மோதி​னார். இதில் பி.​வி.சிந்​து 21-9, 21-12 என்ற நேர் செட் கணக்​கில் வெற்றி பெற்​றார். மற்​றொரு இந்​திய வீராங்​க​னை​யான மாளவிகா பன்​சோத் 13-21, 26-24, 21-13 என்ற செட் கணக்​கில் கனடா​வின் வென் யு ஜாங்கை தோற்​கடித்து 2-வது சுற்றில் கால்​ப​தித்​தார்.

மற்ற இந்​திய வீர​ராங்​க​னை​களான உனதி ஹூடா 21-11, 17-21, 16-21 என்ற செட் கணக்​கில் போட்​டித் தரவரிசை​யில் 4-வது இடத்​தில் உள்ள தாய்​லாந்​தின் போன்​பாவி சோச்​சுவோங்​கிட​மும், அன்​மோல் கார்ப் 21-19, 13-21, 18-21 என்ற செட் கணக்​கில் டோக்​கியோ ஒலிம்​பிக் சாம்​பிய​னான சீனா​வின் ஷென் யு ஃபெ​யிட​மும், தன்வி சர்மா 17-21, 8-21 என்ற செட் கணக்​கில் ஜப்​பானின் ஹினா அகேச்சி​யிட​மும் தோல்வி அடைந்​தனர்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version