Home தேசிய செய்திகள் ராணுவ மையத்தை கண்காணிக்க மின்கம்பத்தில் ரகசிய கேமரா: பாக்., கனடாவில் உள்ள தீவிரவாதிகள் சார்பில் செயல்பட்ட...

ராணுவ மையத்தை கண்காணிக்க மின்கம்பத்தில் ரகசிய கேமரா: பாக்., கனடாவில் உள்ள தீவிரவாதிகள் சார்பில் செயல்பட்ட இருவர் கைது

0

ராணுவ மையத்தை கண்காணிக்க மின்கம்பத்தில் ரகசிய கேமரா பொருத்தியதாக இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பஞ்​சாப் மாநிலம் பதிண்டா நகரில் மிகப் பெரிய ராணுவ மையம் மற்​றும் ராணுவத் தலை​மையகம் உள்​ளது. இதன் அரு​கில் பதிண்டா விமானப்​படைத் தளமும் உள்​ளது. பாது​காப்பு முக்கியத்து​வம் வாய்ந்த இப்​பகு​தி​யில் நடை​பெற்ற சாலை விபத்து தொடர்​பாக போலீ​ஸார் ஆய்​வுப் பணி​யில் ஈடு​பட்​டனர். அப்​போது சாலை​யில் இருந்த மின் கம்​பத்​தில் ஒரு சிசிடிவி கேமரா பொருத்​தப்​பட்​டிருந்​தது. இது காவல்​ துறை​யால் பொருத்தப்​பட​வில்லை என்​பது உறுதி செய்​யப்​பட்​டது.

அதன்​பின் அந்த சிசிடிவி கேம​ராவை ஆய்வு செய்​த​போது, அது சூரிய ஒளி மின்​சா​ரத்​தில் இயங்​கக் கூடியது என்​பதும், அதில் சிம் கார்டு பொருத்​தப்​பட்​டிருந்​ததும் கண்​டறியப்​பட்​டது. அதன் பதிவு​கள் பாகிஸ்​தான் மற்​றும் கனடா​வில் உள்ள தேச விரோத சக்​தி​களுக்கு அனுப்​பப்​பட்​டதும் தெரிய​வந்​தது. அந்த சிம்​கார்டை வாங்கிய​வர் குறித்து விசா​ரணை நடத்​தி​ய​போது, அமிர்​தசரஸ் மாவட்​டம் சாராய் கிராமத்​தைச் சேர்ந்த சமையல்​காரர் அசோக் சிங் ​(40) என்​பவர் சிக்​கி​னார்.

இவர்​தான் சிசிடிவி கேமரா மற்​றும் சிம்​ வாங்கி அக்​ஷ்தீப் சிங்​ (22) என்ற வேலை​யில்லா நபருடன் சேர்ந்து மின் கம்​பத்​தில் பொருத்தியுள்​ளார். இதையடுத்து இருவ ரும் கைது செய்யப்பட்டனர். இதன் பின்​னணி​யில் மூளை​யாக செயல்​பட்ட நபர் மற்​றும் அவரது கூட்​டாளியை போலீ​ஸார் தேடி வருகின்றனர்.

பதிண்டா சாலை​யில் ராணுவ நடமாட்​டம் குறித்த வீடியோ பதிவுகளை இவர்​கள் பாகிஸ்​தான் மற்​றும் கனடா​வில் உள்ள தீவிர​வாத சக்​தி​களுக்கு அனுப்​பும் சதிச் செயலில் ஈடுபட்டுள்ளனர். இச்​சம்​பவத்​தையடுத்து பதிண்டா பகு​தி​யில் பாது​காப்பை பலப்​படுத்​தும்​ பணி​கள்​ மேற்​கொள்​ளப்​படுகின்​றன.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version