Home தேசிய செய்திகள் கேரளாவில் கனமழையால் வெள்ளம்: நிலச்சரிவால் 8 பேர் உயிரிழப்பு; 8 பேர் மாயம்

கேரளாவில் கனமழையால் வெள்ளம்: நிலச்சரிவால் 8 பேர் உயிரிழப்பு; 8 பேர் மாயம்

0

கேரளா​வில் பரு​வ​மழை தீவிரம் அடைந்துள்ளதால் பல இடங்​களில் வெள்​ளப் பெருக்​கு, நிலச்​சரிவு ஏற்​பட்​டுள்​ளது. இதில் சிக்கி 8 பேர் உயி​ரிழந்​தனர், 13 பேர் காயமடைந்​தனர். 8 பேரைக் காண​வில்​லை.

கேரளா​வில் பரு​வ​மழை தீவிரமடைந்​து பல பகுதிகளில் கடந்த ஒரு வாரத்துக்கு மேலாக கனமழை பெய்து வருகிறது. பல இடங்கள் வெள்ளம், நிலச்சரிவும் ஏற்பட்டது. ஏற்கெனவே பாதிக்கப்பட்டிருந்த வயநாட்டில் கடந்த வாரம் மீண்டும் நிலச்சரிவு ஏற்​பட்​டது. இந்நிலையில், கண்ணூர் மாவட்​டம் அய்யன்​குன்னு பகு​தி​யில் நேற்று 320 மி.மி மழை பதி​வானது.

கேரளா​வில் உள்ள பல அணை​கள் நிரம்​பி​விட்​டன. மலங்​கரா அணை​யில் 5 மதகு​கள் திறக்​கப்​பட்​டன. இங்​குள்ள ஆறுகளில் வெள்​ளம் பெருக்​கெடுத்து ஓடு​கிறது. கோழிக்​கோடு, கண்​ணூர் ஆகிய இடங்களில் சாலைகள் வெள்ள நீரில் மூழ்​கி​யுள்ளன. வாகனங்​கள் வெள்ள நீரில் ஊர்ந்து செல்​கின்றன. கடைகளில் வெள்​ளம் புகுந்​துள்​ளது. அலுவா சிவன் கோயில் வெள்​ளத்​தில் மூழ்​கி​யுள்​ளது.

மழை பாதிப்பு குறித்து கேரள முதல்​வர் சதீஷன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்​டி​யில் கூறியதாவது: கனமழை காரண​மாக ஏற்​பட்ட வெள்​ளத்​தில் சிக்கி 8 பேர் உயி​ரிழந்​தனர், 8 பேரை காண​வில்​லை. 27 வீடு​கள் முற்​றி​லும் சேதமடைந்​தன. 196 வீடு​களில் லேசான சேதம் ஏற்​பட்​டுள்​ளது.

வெள்ள பாதிப்பு பகுதிகளில் இருந்து 5,792 பேர் மீட்பு குழு​வினர் மீட்டு 209 நிவாரண முகாம்​களில் தங்க வைத்​துள்​ளனர். வெள்​ளத்​தால் வீடு​கள், உறவினர்​கள் மற்​றும் வாழ்​வா​தா​ரத்தை இழந்த குடும்​பங்​களுக்கு உதவி​கள் அளிக்கப்​படும். இவ்​வாறு சதீஷன் கூறி​னார்.

ஆரஞ்சு எச்​சரிக்கை: கேரளா​வின் 12 மாவட்​டங்​களுக்கு இந்​திய வானிலை மையம் நேற்று முன்தினம் ஆரஞ்சு எச்​சரிக்கை விடுத்தது. இப்​பகு​தி​யில் இடி​யுடன் கூடிய மிக கனமழை பெய்​யும் எனவும்​ எச்​சரிக்​கை விடுக்​கப்​பட்​டது.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version