இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டம்: மாதவரம் – மூலக்கடை வந்தடைந்த சேர்வராயன் சுரங்கம் தோண்டும் இயந்திரம்

0
30

சென்​னை​யில், 2-ம் கட்ட மெட்ரோ ரயில் திட்​டம், ரூ.63,246 கோடி மதிப்​பில், 116.1 கி.மீ. தொலை​வில் 3 வழித் தடங்​களில் செயல்​படுத்​தப்​படு​கின்​றன. இவற்​றில், மாதவரம் – சிறுசேரி சிப்​காட் வரையி​லான 3-வது வழித்​தடம் (45.4 கி.மீ.) ஒன்​றாகும்.

இத்​தடத்​தில் பல்​வேறு இடங்​களில் சுரங்​கப் பாதை பணி முழு​வீச்​சில் நடை​பெறுகின்​றன. இதன் ஒரு பகு​தி​யாக, மாதவரம் பால்​பண்ணை முதல் கெல்​லீஸ் வரையி​லான முதல் 9 கி.மீ. தொலை​வுக்கு சுரங்​கப் பாதை அமைக்​கும் பணியை டாடா புராஜெக்ட்ஸ் நிறு​வனம் மேற்​கொண்டு வரு​கிறது.

இப்​பணிக்​காக மொத்​தம் 7 சுரங்​கப் பாதை தோண்​டும் இயந்​திரங்​கள் பயன்​படுத்​தப்​படு​கின்​றன. இதில், சேர்​வ​ராயன் என்று பெயரிடப்​பட்ட சுரங்​கப் பாதை தோண்​டும் இயந்​திரம், மாதவரம் நெடுஞ்​சாலை ரயில் நிலை​யத்​திலிருந்து மூலக்​கடை ரயில் நிலை​யம் வரையி​லான (கீழ் வழித்​தடம்) பகு​தி​யில் சுரங்​கம் தோண்​டும் பணி​யைத் தொடங்​கியது.

மொத்​தம் 824.6 மீட்​டர் தொலை​வுக்கு சுரங்​கம் அமைக்​கும் பணியை முடித்​து, மூலக்​கடை மெட்ரோ நிலை​யத்தை சேர்​வ​ராயன் சுரங்​கம் தோண்​டும் இயந்​திரம் வெற்​றிகர​மாக வந்​தடைந்​தது.

இந்​நிகழ்​வை, சென்னை மெட்ரோ ரயில் நிறு​வனம், டாடா புராஜெக்ட்ஸ் நிறு​வனம் மற்​றும் பொது ஆலோ​சகர் நிறு​வனத்​தின் உயர் அலு​வலர்​கள் மற்​றும் பணி​யாளர்​கள் தளத்​தில் இருந்து பார்​வை​யிட்​டனர்.

இதுகுறித்​து, சென்னை மெட்ரோ ரயில் நிறுவன அதி​காரி​கள் கூறிய​தாவது: ஒட்​டுமொத்​த​மாக, 2-ம் கட்ட சென்னை மெட்ரோ ரயில் திட்​டத்​தில் இது​வரை 23 சுரங்​கம் தோண்​டும் இயந்​திரங்​கள் தங்​களின் பணி​களை முடித்து இலக்​கு​களை வெற்​றிகர​மாக எட்​டி​யுள்​ளன.

இத்​திட்​டத்​தில், மாதவரம் நெடுஞ்​சாலை மற்​றும் மூலக்​கடைக்கு இடையே​யான சுரங்​கப் பாதை பகு​தி, பெரும் சவால்​கள் நிறைந்த மிகக் கடின​மான ஒரு பகு​தி​யாகும்.

இந்த சுரங்​கம் தோண்​டும் இயந்​திரம் பக்​கிங்​காம் கால்​வாய்க்கு அடி​யிலும், போக்​கு​வரத்து நெரிசல் மிகுந்த சாலைக்கு அடி​யிலும், 14 க்​கும் மேற்​பட்ட ஆழ்​துளைக் கிணறுகளைக் கடந்​தும் சுரங்​கம் அமைக்​கும் பணியை முடித்​தது.

இதனால், பொது​மக்​களுக்கு எந்​த​விதப் பாதிப்​பும் அல்​லது தண்​ணீர் தட்​டுப்​பாடும் ஏற்​ப​டாத வண்​ணம் வசதி​களை உடனுக்குடன் செய்து கொடுத்​து, இச்​ச​வாலான பணி வெற்​றிகர​மாக முடிக்​கப்​பட்​டுள்​ளது.

அனு​ம​திக்​கப்​பட்ட குறைந்​த​பட்ச நில அதிர்வு மற்​றும் மாற்​றங்​களுக்​குள் மிகச் சிறப்​பாக நிர்​வகிக்​கப்​பட்​டது. மேலும், இப்​பணி​ கண்​காணிப்​புக் கருவி​கள் மூலம் தொடர்ந்து கண்காணிக்​கப்​பட்​டது. இவ்​வாறு அவர்​கள் கூறினர்.

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here