ரியாத் விமான நிலையம் மீது தாக்குதல் நடத்திய ஹவுதி படைக்கு கடுமையான பதிலடி தரப்படும்: சவுதி அரேபிய இளவரசர் உறுதி

0
16

ரியாத்​தில் உள்ள விமான நிலை​யம் மீது தாக்குதல் நடத்திய ஏமனின் ஹவுதி கிளர்ச்​சி​யாளர்​களுக்கு கடுமை​யான பதிலடி கொடுக்​கப்​படும் என்று சவுதி அரேபியா தெரி​வித்​துள்ளது.

இதுகுறித்து இளவரசர் அப்​துல் அஜீஸ் பின் சல்​மான் கூறிய​தாவது: சவுதி அரேபி​யா​வுக்கு எதி​ராக ஏமனின் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் நேற்று முன்​தினம் ரியாத்​தின் கிங் காலித் சர்வ​தேச விமான நிலை​யம் மீது தாக்​குதல் நடத்​தி​ய​தில் ஒரு​வர் உயி​ரிழந்​தார். முன்​ன​தாக அதே இடத்​தில் நடத்​தப்​பட்ட தாக்குதலில் 13 பேர் கொல்​லப்​பட்​டதும், நூற்​றுக்​கணக்​கானோர் காயமடைந்​தனர். இதனால் விமான நிலை​யத்​தின் சேவை​கள் தற்காலிக​மாக நிறுத்​தப்​பட்​டன.

அவர்​களின் இந்த தாக்​குதல் சவுதி அரேபி​யா​வின் உள்கட்டமைப்பு, நிறு​வனங்​கள், மக்​கள் மற்​றும் நமது உறு​தி​யைச் சோதிக்​கும் வகை​யில் அமைந்​துள்​ளது.

உலகிலேயே அதிக அளவில் எண்​ணெய் ஏற்​றுமதி செய்​யும் நாடாக​வும், இப்​பகு​தி​யின் மிக வலிமை​யான நாடாக​வும் விளங்கும் சவுதியில், பில்​லியன் கணக்​கான டாலர்​கள் ராணுவத்​திற்​காக செல​விடப்​படு​கிறது.

இருப்​பினும், கடந்த பத்​தாண்​டு​களில் இவ்​வளவு உயி​ரிழப்​பு​களை ஏற்​படுத்​திய மிக மோச​மான தாக்​குதலாக இது அமைந்​துள்​ளது. எரிசக்தி கட்​டமைப்​பு​கள் மீதான தாக்​குதலை சாதா​ரண​மாக எடுத்​துக் கொள்ள முடி​யாது. ரி​யாத் விமான நிலை​யம் மட்டுமல்லாமல், நாட்​டின் கிழக்​குப் பகு​தி​யில் உள்ள தம்​மாம் நகரில் அமைந்​துள்ள கிங் ஃபாத் சர்​வதேச விமான நிலை​ய​மும் குறிவைக்​கப்​பட்​டது.

மேலும், நாட்​டின் தெற்​குப் பகுதியான காமிஸ் முஷைத் நகரில் உள்ள முக்​கிய ராணுவ தளத்தை நோக்கி வந்த ஹவு​தி​களின் பாலிஸ்​டிக் ஏவு​கணை இடைமறித்து அழிக்கப்பட்​டது. அவர்​கள் முழு​மை​யான போர் குற்​றத்​தில் ஈடுபட்டு வரு​கின்​றனர். அவர்​களுக்கு சவுதி தலை​மையி​லான கூட்​டணி உறு​தி​யான பதிலடியை வழங்​கும்​. இவ்​வாறு சல்மான் கூறினார்.

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here