Home தேசிய செய்திகள் ஆரோக்கியமாக இருக்க சைக்கிள் ஓட்டுங்கள்: மத்திய அமைச்சர் வலியுறுத்தல்

ஆரோக்கியமாக இருக்க சைக்கிள் ஓட்டுங்கள்: மத்திய அமைச்சர் வலியுறுத்தல்

0

ஆரோக்கியமாக இருக்கவும், மாசற்ற சூழலை உருவாக்கவும், இளைஞர்கள் சைக்கிள் பயன்படுத்த வேண்டும் என மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா வலியுறுத்தியுள்ளார்.

மும்பை கேட்வே ஆப் இந்தியா பகுதியில் ஃபிட் இந்தியா இயக்கத்தை மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா நேற்று தொடங்கி வைத்தார். இதில் சைக்கிள் ஆர்வலர்கள் 500-க்கும் மேற்பட்டோர் பங்கேற்று சைக்கிள் பயணம் மேற்கொண்டனர். இதன் மூலம் ஞாயிற்று கிழமைகளில் சைக்கிள் பயன்படுத்துவது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

இந்நிகழ்ச்சி குறித்து அவர் கூறுகையில், ‘‘ அனைவரும், குறிப்பாக இளைஞர்கள் வாய்ப்பு கிடைக்கும் நேரங்களில் குறுகிய தூர இடங்களுக்கு செல்ல சைக்கிள் பயன்படுத்த வேண்டும். இதன் மூலம் நமது ஆரோக்கியம் மேம்படுவதுடன், சுற்றுச் சூழலும் மேம்பட்டு மாசு பிரச்சினைக்கு தீர்வு ஏற்படும்’’ என்றார்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version