குர்பானி கொடுக்க கட்டுப்பாடுகள் விதிப்பு: உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு – ஐயூஎம்எல் வலியுறுத்தல்

0
23

குர்​பானி கொடுக்க கட்​டுப்​பாடு​கள் விதித்து சென்னை உயர்​நீ​தி​ மன்​றம் வழங்​கி​யுள்ள தீர்ப்பை எதிர்த்​து, தமிழக அரசு உச்​சநீ​தி​மன்​றத்​தில் மேல்​முறை​யீடு செய்ய வேண்​டும் என்​று, முதல்​வரிடம், இந்​திய யூனியன் முஸ்​லிம் லீக் நிர்​வாகி​கள் நேரில் வலி​யுறுத்​தினர்.

இந்​திய யூனியன் முஸ்​லிம் லீக் தலை​வர் பேராசிரியர் கே.எம்​.​காதர் மொகிதீன் தலை​மை​யில், மாநில பொதுச் செய​லா​ளர் கே.ஏ.எம். முஹம்​மது அபூபக்​கர், எம்​.பி. கே.ந​வாஸ்​க​னி, மாநில சிறு​பான்​மை​யினர் நலத்​துறை அமைச்​சர் ஏ.எம். ஷாஜஹான் உள்​ளிட்ட நிர்​வாகி​கள், முதல்​வர் விஜய்யை தலை​மைச் செயல​கத்​தில் நேற்று சந்​தித்​துப் பேசினர்.

அப்​போது, தமிழக அரசு சார்​பில் இன்று (5-ம் தேதி) சென்​னை​யில் நடை​பெறும் காயிதே மில்​லத் 131-வது பிறந்த நாள் விழா​வில் பங்​கேற்​கு​மாறு முதல்​வருக்கு அழைப்பு விடுக்​கப்​பட்​டது.

மேலும், தமிழக முஸ்​லிம் சமு​தாய மக்​களின் முக்​கிய கோரிக்​கைகள் தொடர்​பான மனு முதல்​வரிடம் அளிக்​கப்​பட்​டது. அந்த மனு​வில், பக்​ரீத் நாளின் குர்​பானி கொடுக்​கும் நடை​முறையை தடுக்​கும் வகை​யில், சென்னை உயர்​நீ​தி​மன்​றத்​தில் வழக்கு தொடர்ந்​து, அரசின் அனு​மதி பெற்ற இடங்​களில் மட்​டுமே விலங்​கு​களை வெட்ட வேண்​டும் என்​று, ஏற்​கெ​னவே உள்ள சட்ட விதி​களை மேற்​கோள் காட்டி சாதக​மான தீர்ப்பை பெற்​றுள்​ளனர்.

இதனால், நீதி​மன்ற தீர்ப்​புக்கு கட்​டுப்​பட்ட அரசு அதி​காரி​கள், பல்​வேறு பகு​தி​களில் முஸ்​லிம் மக்​கள் தங்​களின் மார்க்க கடமை​யைச் செய்ய விடா​மல் தடுத்​துள்​ளனர்.

இந்​நிலை​யில், சென்னை உயர்​நீ​தி​மன்​றத்​தின் தீர்ப்​புக்கு எதி​ராக உச்​சநீ​தி​மன்​றத்​தில் தமிழக அரசு சார்​பில் உடனடி​யாக மேல்​முறை​யீடு செய்ய வேண்​டும் என, மனு​வில் குறிப்​பிடப்​பட்​டுள்​ளது.

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here