‘பிரதமர், அவரது தாய் குறித்த பேச்சு தரக்குறைவானது’ – ராகுல் காந்திக்கு பாஜக மூத்த தலைவர்கள் கண்டனம்

0
19

இந்​தூரில் நடை​பெற்ற மாணவர்​கள் நிகழ்ச்​சி​யில் பிரதமர் மோடி மற்​றும் அவரது தாய் பற்​றிய ராகுல் காந்தி​யின் விமர்​சனங்​கள் தரக்​குறை​வானவை என பாஜக மூத்த தலைவர்கள் கண்​டனம் தெரி​வித்​துள்​ளனர்.

மத்​திய பிரதேச மாநிலம் இந்​தூரில் மாணவர்​களின் முழக்​கம் (சத்ரோன் கி கூஞ்ச்) என்ற நிகழ்ச்சி நேற்று முன்​தினம் நடைபெற்றது. இதில் மக்​களவை எதிர்க்​கட்​சித் தலை​வர் ராகுல் காந்தி பங்​கேற்றார். ஸ்டாண்ட்​-அப் நகைச்​சுவை கலைஞர் புல்கிட் மணியும் பங்​கேற்​றார். மாணவர்​களின் பிரச்​சினை​கள் குறித்து கலந்​துரை​யாட இந்​நிகழ்ச்​சிக்கு ஏற்​பாடு செய்​யப்​பட்​டது. இந்நிகழ்ச்சி தொடர்​பான வீடியோ காங்​கிரஸ் கட்​சி​யின் எக்ஸ் பக்கத்​தில் பகிரப்பட்டது.

அந்த வீடியோ​வில், புல்​கிட் மணி மேடை​யில் ராகுல் காந்​தி​யுடன் இணைந்து நிகழ்ச்​சியை நடத்​து​வதும், பிரதமர் நரேந்​திர மோடியைப் போல பாவனை செய்​வதும் இடம்​பெற்​றுள்​ளது. பிரதமர் மோடி​யின் மறைந்த தாயார் குறித்​தும் அதில் சில விமர்சனங்​கள் வெளி​யிட்​ட​தாக பாஜக தலை​வர்​கள் குற்​றம் சாட்டியுள்ளனர். மோடி தலை​மையி​லான அரசின் தூதரக அணுகுமுறையை விமர்​சித்த ராகுல் காந்​தி, பிரதமரின் குரலைப்போல நகைச்​சுவை​யாகப் பேசி கேலி செய்​த​தாக​வும் பாஜக குற்​றம் சாட்டி உள்​ளது.

பாஜக தேசிய செய்​தித் தொடர்​பாளர் சி.ஆர். கேசவன், “பிரதமரின் தாயைக் கேலி செய்​வதன் மூலம் ராகுல் காந்தி பெண்களை அவம​தித்​துள்​ளார். எந்​தவொரு நாகரி​க​மான, நல்லெண்​ணம் கொண்ட நபருக்​கும் இந்த அநாகரி​க​மான, மட்டமான செயல்​கள் வேடிக்​கை​யாக இருக்​காது. ஆனால் ராகுல் ஒரு நகைச்​சுவை கலைஞருடன் மேடையைப் பகிர்ந்து கொண்டு சத்​த​மாக சிரித்​துக் கொண்​டிருந்​தார். ராகுல் ஆதரிக்​கும் இத்தகைய நாகரீகமற்ற கலாச்​சா​ரம்​தான் அவரும் காங்​கிரஸும் இளைஞர்களிடம் எடு​ப​டா​மல் போனதற்​குக் காரணம்” என்று கூறியுள்ளார்.

மத்​திய கல்வி அமைச்​சர் பிரகலாத் ஜோஷி், “ராகுல் காந்​தி​யும் காங்​கிரஸ் கட்​சி​யும் தார்​மீக ரீதி​யாக அதல​பா​தாளத்​துக்கு சென்று​விட்​டனர். பிரதமர் மோடி​யின் மறைந்த தாயாரை் அவமதித்​துள்​ளதன்​மூலம் அடிப்​படை மனிதநேய​மும்​ அரசி​யல்​ ​நாகரி​க​மும்​ அவர்​களிடம்​ துளி​யும்​ இல்​லை என்​பது தெளிவாகிறது” என்​று கூறியுள்ளார்

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here