இந்திய எல்லை அருகே மதக் கலவரம் கட்டுக்குள் வந்தது: நேபாளத்தில் இயல்பு நிலை திரும்பியது

0
10

இந்​தி​யா​வுட​னான எல்​லையை ஒட்​டிய நேபாளத்தில் பல நாட்​களாக நீடித்த மதக் கலவரம் கட்​டுக்​குள் வந்​த​தால் அங்கு இயல்​புநிலை திரும்பி உள்​ளது.

இந்​திய எல்​லைக்கு அருகே நேபாளத்​தின் கோஷி மாகாணம் சுன்சாரி மாவட்​டத்​தில் கடந்த ஜூலை 26-ம் தேதி 2 சமூகத்​தினர் தனித்​தனி​யாக நிகழ்ச்​சிகளை நடத்தி வந்​தனர்.

அப்​போது ஒலிபெருக்​கி​களைப் பயன்​படுத்​து​வது மற்​றும் மதக் கொடிகளைக் காட்​சிப்​படுத்​து​வது தொடர்​பாக இருதரப்​புக்​கும் இடையே மதக் கலவரம் வெடித்​து, 3 பேர் உயி​ரிழந்​தனர். கலவரம் பாதித்த பகு​தி​யில் ஊரடங்கு உத்​தரவு பிறப்​பிக்​கப்​பட்​டது.

இந்​நிலை​யில், கடந்த சில நாட்​களாக நிலைமை சீரடைந்​துள்​ளது. மாதேஷ் மாகாணத்​தின் தனுஷா மாவட்​டத்​தில், பல்​வேறு போராட்​டக் குழுக்​கள் தங்​கள் போராட்​டத்​்தை வாபஸ் பெற்​றன. இதையடுத்​து, ஊரடங்கு விலக்​கிக் கொள்​ளப்​பட்​டது. சிராஹா மாவட்​டத்​தில் உள்ள கோல்​சார் பகு​தி​யிலும் ஊரடங்கு உத்​தரவு தளர்த்​தப்​பட்​டது. இதையடுத்து நேபாளத்​தில் இயல்​புநிலை திரும்பி உள்​ளது.

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here