லாட்டரியில் ரூ.12 கோடி வென்ற பஞ்சாப் விவசாயி: 16 ஆண்டுகளுக்குப் பின் பலன் கிடைத்தது

0
22

 பஞ்சாப்பை சேர்ந்த விவசாயி ஒரு​வர் லாட்டரி​யில் ரூ.12 கோடி வென்​றார். பஞ்சாப் மாநிலம் டேராபஸ்ஸி அருகே உள்ள ஹுமாயுன்​பூர் கிராமத்​தைச் சேர்ந்த விவசாயி பல்​ஜிந்​தர் சிங். இவர், கடந்த 2010-ம் ஆண்டு முதல் லாட்டரி டிக்கெட்​களை வாங்கி வந்​தார்.

ஆனால் அவருக்கு எந்​தப் பரிசும் கிடைக்​க​வில்லை. என்​றாவது ஒருநாள் அதிர்​ஷ்​டம் கைகொடுக்​கும் என்ற நம்​பிக்​கை​யில் தொடர்ந்து லாட்​டரி டிக்​கெட்​களை வாங்​கி் வந்​தார். தீபாவளியையொட்டி பஞ்​சாப் மாநில டியர் தீபாவளி பம்​பர் லாட்டரி 2026-ன் கீழ் விற்​பனை செய்​யப்​பட்ட 500 ரூபாய் லட்​டாரி டிக்​கெட்டை வாங்​கினார்.

அதன் குலுக்​கல் முடிவு​கள் கடந்த திங்​கள் மாலை அறிவிக்கப்பட்டன. இதில் முதல் பரிசான ரூ.12 கோடியை பல்ஜிந்தர் சிங் வென்​றார். இந்​தப் பரிசு பல்​ஜிந்​தர் சிங் மற்​றும் அவரது குடும்​பத்​தினரை இன்ப அதிர்ச்​சி​யில் ஆழ்த்​தி​யது. வெற்றியை அறிந்​ததும் அவர் ஜிராக்​பூரில் உள்ள லாட்​டரி அலுவலகத்​துக்​குச் சென்று, பரிசுத் தொகையைப் பெறு​வதற்​கான நடைமுறைகளை முடித்தார்.

இதனிடையே, பல்​ஜிந்​தர் சிங் லாட்​டரி​யில் ரூ.12 கோடி பரிசு வென்ற செய்தி அவரது கிராமத்​தில் காட்​டுத்தீ போல பர​வியதை அடுத்து, அங்கு கொண்​டாட்​டங்​கள் தொடங்​கின. கிராம மக்​கள் அவரது வீட்​டுக்​குச் சென்று குடும்​பத்​தினருக்கு வாழ்த்​துத் தெரிவித்து, இனிப்​பு​களை​யும் வழங்​கினர்.

முன்​னதாக, லாட்​டரி அலு​வல​கத்​தில் செய்​தி​யாளர்​களிடம் பேசிய பல்​ஜிந்​தர் சிங், “இறுதி​யாக, கட​வுள் என் பிரார்த்​தனைகளுக்​குப் பதிலளித்​து​விட்​டார். அவருக்கு எனது நன்றி” என தெரி​வித்​தார். பரிசுத் தொகையை எவ்​வாறு பயன்​படுத்​தத் திட்​ட​மிட்​டுள்​ளீர்​கள் என்று கேட்​டதற்கு, தனது இரண்டு பிள்​ளைகளின் கல்​விக்​காகக் கணிச​மான தொகையைச் செல​விடுவேன் என்று கூறினார்.

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here